அசிடிட்டி பிரச்சனையை 10 நிமிடத்தில் போக்கும் 'சில' உணவுகள்!

அசிடிட்டி அல்லது அமிலத்தன்மை என்பது செரிமான பிரச்சினையால் ஏற்படும் உடல் நல பிரச்சனை. இதனை நெஞ்சு எரிச்சல் என்றும் கூறுவார்கள். இது மிகவும் அஅசௌகரியத்தை ஏற்படுத்தக் கூடியது.

ஆசிடிட்டி பிரச்சனையை சமாளிக்க அடிக்கடி மருந்து மாத்திரைகள் சாப்பிடுவதை பலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் அவை பக்க விளைவுகளைக் கொண்டுள்ளதால் அடிக்கடி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

1 /7

அசிடிட்டி பிரச்சனை ஏற்பட்டால், நெஞ்சு எரிச்சல், வயிற்றில் எரிச்சல் அல்லது புளித்த ஏப்பம் ஆகியவை உண்டாகி ஒரு அசௌகரியமான சூழ்நிலையை உருவாக்கும். ஆசிடிட்டி சமாளிக்க உதவும் சில உணவுகளை அறிந்து கொள்ளலாம்.

2 /7

நன்றாக காய்ச்சி ஆற வைக்கப்பட்ட பால் அசிடிட்டி பிரச்சனையை தீர பெருமளவு உதவும். குளிர்ந்த பால் உடனடி நிவாரணம் அளிக்கும்.

3 /7

ப்ரோபயோடிக் தன்மையை கொண்ட மோர், அசிடிட்டி பிரச்சனையை தீர்ப்பதில் மிகவும் சக்தி வாய்ந்தது. இந்த உடன் சீரகத்தூள் சேர்த்து பருகுவது சிறந்த பலனை கொடுக்கும்.

4 /7

அசிடிட்டி பிரச்சனையை தீர்க்க கிராம்பு துண்டுகளை வாயில் போட்டு மெல்வதால் ஹைட்ரோ குளோரிக் அமிலம் தூண்டப்பட்டு நெஞ்செரிச்சல் குறையும்.

5 /7

இஞ்சி செரிமான பிரச்சனைகளை தீர்ப்பதில் மிகவும் பலன் கொடுக்கக் கூடியது. இஞ்சி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம். அடிக்கடி இஞ்சி உணவில் சேர்த்துக் கொள்வதும் அசிடிட்டி பிரச்சனைக்கு தீர்வு அளிக்கும்.

6 /7

அகத்தை சீர் செய்யும் சீரகம் செரிமானத்தை தூண்டி பிரச்சனைக்கு தீர்வு அளிக்கும். சீரக நீர் அருந்துவது உடனடி நிவாரணம் அளிக்கும்.  

7 /7

பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.