தினசரி உணவில் பயன்படுத்தப்படும் இஞ்சியில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இஞ்சியை பச்சையாக சாப்பிட்டால் உடலில் என்ன மாற்றங்கள் நிகழும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இஞ்சியை பச்சையாக சாப்பிட்டால் உமிழ்நீர் உற்பத்தி அதிகரித்து செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும் இவற்றில் குமட்டல் எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் சாப்பிட பிறகு ஏற்படும் அசவுகரியத்தை குறைகிறது.
இஞ்சியில் பயோஆக்டிவ் சேர்மங்கள் அதிகம் உள்ளன. இவை உடலில் ஏற்படும் வீக்கங்களை குறைக்க உதவுகிறது. மேலும் கீல்வாதம் போன்ற அழற்சி பிரச்சனைகளுக்கும் நன்மை பயக்கும்.
இஞ்சியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இவை உடலில் நோய் எதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிக்க செய்கிறது. மழைக்காலத்தில் ஏற்படும் நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.
இஞ்சியை பச்சையாக சாப்பிடுவதால் கீல்வாதம், மாதவிடாய் போன்ற சமயத்தில் ஏற்படும் வலியை குறைக்க உதவுகிறது. மேலும் கொலஸ்ட்ரால் அளவையும், இரத்த அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது.
இஞ்சி உடலில் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இஞ்சியில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
கூடுதலாக இஞ்சி மன அழுத்தத்தையும், பதட்டத்தையும் குறைக்க உதவுகிறது. இஞ்சியை உணவுகளில் பயன்படுத்தி வந்தால் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.