எடையை ஈசியா குறைக்க..’இந்த’ 8 உடற்பயிற்சியை அடிக்கடி பண்ணுங்க..!

Full Body Workouts For Rapid Weight Loss : உடல் எடையை குறைக்க நாம் சில உடற்பயிற்சிகளை தினசரி செய்ய வேண்டியிருக்கிறது. அவை என்னென்ன தெரியுமா?

Full Body Workouts For Rapid Weight Loss : உலகில் பலர், சமீப காலமாக அடிக்கடி சந்தித்து வரும் பிரச்சனைகளுள் ஒன்று, உடல்பருமன். வாழ்க்கை முறை மாற்றங்களாலும், இந்த பிரச்சனை ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதை தவிர்க்க சில உடற்பயிற்சிகளும் உணவு முறைகளும் இருக்கின்றன. அப்படி, நாம் ஜிம்மில் செய்யக்கூடிய உடற்பயிற்சிகளை இங்கு பார்ப்போம்.

1 /8

ஸ்குவாட்: தொடை மற்றும் தொப்பையை குறைக்க உதவும் உடற்பயிற்சிகளுள் ஒன்று, ஸ்குவாட். இதை ஜிம்மில் மட்டுமல்ல, வீட்டிலும் செய்யலாம். 

2 /8

ஷோல்டர் ப்ரெஸ்: ஷோல்டர் பெச்ஸ் உடற்பயிற்சியை செய்வதால், மேல் உடல் பாகங்கள் வலுப்படும் என கூறப்படுகிறது. இதனால், கூன் உடன் இருக்கும் நமது தோரணையும் மாறலாம். 

3 /8

புல் அப்: பின்பகுதி தசைகள், தோள்பட்டைகலை வலுப்படுத்த என பல்வேறு நன்மைகளுக்கு செய்ய வேண்டிய உடற்பயிற்சிதான் புல் அப்.

4 /8

மிலிட்டரி ப்ரெஸ்: மிலிட்டரி ப்ரெஸ் உடற்பயிற்சியை ஜிம்மில் செய்யலாம். இதை செய்தால் உயரமாகலாம் என்று கூறப்படுகிறது. இது, கலோரியை குறைக்கும் நல்ல உடற்பயிற்சியாகும். 

5 /8

லஞ்சஸ்: லஞ்சஸ் உடற்பயிற்சியை, உடலின் பேலன்ஸிற்காகவும் மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும் செய்யலாம். கால்களை வலுப்படுத்த, இந்த உடற்பயிற்சியை செய்யலாம். 

6 /8

டிப்ஸ்: தோள்பட்டை, மற்றும் கைகளை வலுப்படுத்த இந்த ஷோல்டர் டிப்ஸ் உடற்பயிற்சிகளை செய்யலாம். 

7 /8

டெட் லிஃப்ட்: டெட் லிஃப்ட் உடற்பயிற்சியை செய்ய டம்புள்ஸ் தேவைப்படும். இது, இடுப்பு மற்றும் முதுகுவலியை நீக்க உதவும். 

8 /8

பெஞ்ச் பிரஸ்: தசையை வலுப்படுத்த, எலும்புகளை வலுப்படுத்த என பல்வேறு நன்மைகளுக்கு இந்த உடற்பயிற்சியை செய்யலாம். இதை செய்வதால் கலோரிகள் குறைந்து இரவில் நன்றாக தூக்கமும் வருமாம்.  (பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)