Nervous system: நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும் ‘சூப்பர்’ உணவுகள்!

இன்றைய மோசமான வாழ்க்கை முறை நம் உடலில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, நம்  நரம்பு மண்டலுமும் பலவீனமடைகின்றன. நரம்புகள் பலவீனமாக இருக்கும் போது, ​​உடலில் சரியான இரத்த ஓட்டம் இருக்காது. அதனால் பல பிரச்சனைகள் எழுகின்றன.

உங்கள் உணவு முறையை ஆரோக்கியமாக மாற்றுவதன் மூலம் உங்கள் நரம்புகளை இயற்கையாக வலுப்படுத்தலாம். அதற்கு உங்கள் டயட்டில் எந்தெந்த உணவுகளைச் சேர்க்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

1 /6

நரம்புகள் பலவீனமாக இருக்கும் போது, ​​உடலில் சரியான இரத்த ஓட்டம் இருக்காது. அதனால் பல பிரச்சனைகள் எழுகின்றன. ஆனால் உங்கள் உணவு முறையை ஆரோக்கியமாக மாற்றுவதன் மூலம் உங்கள் நரம்புகளை இயற்கையாக வலுப்படுத்தலாம். அதற்கு உங்கள் டயட்டில் எந்தெந்த உணவுகளைச் சேர்க்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

2 /6

வைட்டமின் பி நரம்புகளின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது. முழு தானியங்களான கைக்குத்தல் அரிசி, பார்லி, திணை போன்றவற்றில் வைட்டமின் பி அதிகம் உள்ளதால், இது உங்கள் நரம்புகளின் பலவீனத்தை நீக்குகிறது. 

3 /6

உலர் பழங்களில் மெக்னீசியம் சத்து நிறைந்துள்ளது.  இது உங்கள் உடலின் நரம்புகளுக்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்து. நரம்பு பிரச்சனை உள்ளவர்கள் மட்டுமின்றி, அனைவரும் பாதாம், முந்திரி, வாதுமை பருப்புகள் போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

4 /6

வைட்டமின் பி, சி, ஈ, மெக்னீசியம், தாமிரம், ஃபோலேட் மற்றும் கால்சியம் ஆகியவை பச்சை காய்கறிகளில், அதிக அளவில் காணப்படுகின்றன. இது உங்கள் நரம்புகளின் பலவீனத்தை நீக்குகிறது. அவற்றை உங்கள் உணவின் சேர்த்து கொள்வது நரம்பு பிரச்சனைகளில் இருந்து உங்களைக் காக்கும்

5 /6

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நரம்புகளுக்கு பலம் தரும். மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. அதனால் தான் மீன்களை உணவில் சேர்த்துக்கொள்வது நரம்புகளை வலுப்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

6 /6

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.