தேநீருடன் பிணக்கு கொள்ளும் உணவுகள்! டீயுடன் இதை சாப்பிடுவது ஆபத்து

Food Alert for Tea Lovers: தேநீர் உலகம் முழுவதும் ரசித்து அருந்தும் பானம். ஆனால், தேநீருடன் ஒத்துப்போகாத உணவுகளை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது...

பிளாக் டீயோ, தேநீரோ அல்லது பால் சேர்க்காத தேநீரோ எதுவாக இருந்தாலும், அதனுடன் இந்த உணவுகளை தவிக்கவும்...

மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகள் மஞ்சள் உட்கொள்ளலாமா

பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை.

1 /4

டீயுடன் பக்கோடா: மழைக்காலத்தில் டீயுடன் பஜ்ஜி, பக்கோடா போன்ற உணவுகளை விரும்பி உண்ணலாம். இருப்பினும், பொரித்த உணவுகளை தேநீருடன் சாப்பிடுவது நல்ல பழக்கம் அல்ல. அதிலும் கடலை மாவில் செய்த பொருட்களுடன் டீ சேர்த்து சாப்பிட்டால் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு செரிமான பிரச்சனைகள் ஏற்படும் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

2 /4

பச்சை காய்கறிகள் அல்லது பழங்களை தேநீருடன் எடுத்துக் கொள்ளக் கூடாது. அது உடல் நலத்திற்கும் வயிற்றுக்கும் தீங்கு விளைவிக்கும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, சூடான தேநீருடன் சாலட், முளை கட்டிய தானியங்கள் அல்லது வேகவைத்த முட்டையை எடுத்துக் கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.

3 /4

டீ குடித்துவிட்டு தண்ணீர் குடிக்காதீர்கள். அவ்வாறு செய்வது செரிமான அமைப்பில் மோசமான விளைவை ஏற்படுத்தும். இது கடுமையான அமிலத்தன்மை அல்லது பிற வயிற்று பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும், அத்துடன் பற்களை சேதப்படுத்தும்.

4 /4

தேநீர் அருந்தும்போது, மஞ்சள் கலந்தப் பொருட்களை உட்கொள்வதைத் தவிர்க்கவும். உண்மையில், தேநீர் மற்றும் மஞ்சளில் உள்ள இரசாயன கூறுகள் ஒன்றாக வயிற்றுக்குள் செல்லும்போது, அவற்றில் உள்ள இரசாயனங்கள் எதிர்வினை புரிந்து செரிமான அமைப்பை பாதிக்கலாம். இது வயிற்று பிரச்சனைகளை உண்டாக்கும்.