அழகுக்கு வரையறை செய்ய நீங்கள் யார்? போராடும் அழகுப் பிரபலங்கள்

Beauty Advocates: ஒவ்வொருவரும் அழகாகத் தன் இருக்கின்றனர். அழகு என்பது நாம் எப்படி இருக்கிறோம் என்பதே! இந்த டிஜிட்டல் யுகத்தில், அழகு என்பதன் வரையறையின் படி, அழகாக இல்லை என்று சொல்வது சரியா?

 

குறுகிய இடையும், சிவந்த நிறமும் தான் அழகு என்று வரையறை செய்தது யார்? ஒருவரின் தன்னம்பிக்கையை குறைக்கும் அழகுக்கான வரையறைகளுக்கு எதிராக குரல் எழுப்பும் பிரபலங்கள் இவர்கள்... தெரிந்தோ தெரியாமலோ இயற்கையாக அடைய முடியாத யதார்த்தமற்ற அழகு தரநிலைகளுக்கு குரல் எழுப்பும் பிரபலங்களின் பட்டியல்!

மேலும் படிக்க | ஒரு பாலின திருமணங்களை சட்டபூர்வமாக்கியது கம்யூனிஸ்ட் நாடு கியூபா

1 /5

சூப்பர்மாடல் ஆஷ்லே கிரஹாம் ஒரு உடல் பாசிட்டிவிட்டி ஐகான்.அவர் தனது புகைப்படங்களை ரீடச் அல்லது எடிட் செய்யவதில்லை. நாம் இருக்கும் உடல் வடிவத்திலும் அளவிலும் கவலை கொள்ளத் தேவையில்லை என்று சொல்லும் அவர், அழகுக்கான வரையறையை நிர்ணயித்தது யார் என்ற கேள்வியை எழுப்புகிறார்.  

2 /5

உடல் அழகு தொடர்பான கருத்துகளுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் ​​லிசோ, நேர்காணல்கள் மற்றும் சமூக ஊடக இடுகைகளில் தனது கருத்தை பதிவு செய்கிறார். 2019 ஆம் ஆண்டில், ட்ரோல்கள் அவரைக் குறிவைத்தபோது, ​​​​இன்ஸ்டாகிராமில் நேரலைக்குச் சென்று, "யாராவது உங்களைத் தடுக்கவோ அல்லது உங்களை நீங்களே அவமானப்படுத்தவோ ஒருபோதும் அனுமதிக்காதீர்கள்" என்று கூறினார், மேலும் "நான் எப்போதும் இப்படித்தான் இருக்கிறேன். நான் பிரபலமாகிவிட்டதால் என்னை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை. யாரோ ஒருவரின் கருத்தால் நான் பாதிக்கப்பட மாட்டேன்” என்று தெரிவித்தார்

3 /5

டெமி லோவாடோ, கடந்த ஆண்டு பைனரி அல்லாதவராக வெளிவந்த பாடகர், உணவுக் கோளாறுகள் மற்றும் உடல் தோற்றத்துடன் போராடினார். நேர்காணல்களிலோ அல்லது அவரது ஆவணப்படத்திலோ, லோவாடோ உடல் அழகை வைத்து மதிப்பிடுவது பற்றி நீண்ட நேரம் பேசியுள்ளார்.  

4 /5

2019 ஆம் ஆண்டில், மிண்டி டூ பீஸ் ஸ்விம்மிங் சூட்களை அணிந்திருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். ஒவ்வொரு உடலும் வித்தியாசமானது என்று சொல்லும் அவர், குண்டாக இருப்பதால் ஒருவர் இறுக்கமான ஆடைகளை அணிய வெட்கப்படக்கூடாது. “நீங்கள் பிகினி அணிய விரும்பினால் பிகினி அணியுங்கள். அதற்காக நீங்கள் ஒல்லியாக இருக்க வேண்டிய அவசியமில்லை ”என்று அவர் தனது சமூக ஊடகப் பதிவில் பதிவிட்டிருக்கிறார். (புகைப்படம்: இன்ஸ்டாகிராம்)

5 /5

என்பிசி சிட்காம் 'தி குட் பிளேஸ்' நட்சத்திரம் ஜமீலா ஜமீல், பெண்ணியவாதி ஆவார். அழகு தொடர்பான வரையறைகளை உடைத்தெறிய்ம் அவர், புகைப்படங்களை ஃபோட்டோஷாப்பிங் செய்து வெளியிடுவதை கடுமையாக எதிர்க்கிறார், மேலும் இது பற்றி அடிக்கடி நேர்காணல்களில் பேசுகிறார்.