வங்கிகள் பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு சிறந்த வட்டியை வழங்குகிறது, அதிலும் மூத்த குடிமக்களின் பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு அதிகமான வட்டியை வழங்குகிறது.
ஹெச்டிஎப்சி வங்கி மூத்த குடிமக்களின் 7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரையிலான டெபாசிட்டுக்கு 2.75% வருடாந்திர வட்டியை வழங்குகிறது. ஹெச்டிஎப்சி வங்கி 3 வருடங்கள் முதல் 5 வருடங்கள் வரையிலான மூத்த குடிமக்களின் டெபாசிட்டுக்கு 6.60% வருடாந்திர வட்டியை வழங்குகிறது.
ஹெச்டிஎப்சி வங்கி மூத்த குடிமக்களின் 5 வருடங்களுக்கு மேலான டெபாசிட்டுக்கு 6.50% வருடாந்திர வட்டியை வழங்குகிறது.
எஸ்பிஐ வங்கி மூத்த குடிமக்களின் 5 வருடங்கள் முதல் 10 வருடங்கள் வரையிலான டெபாசிட்டுக்கு 6.45% வருடாந்திர வட்டியை வழங்குகிறது.
ஐசிஐசிஐ வங்கி மூத்த குடிமக்களின் 3 வருடங்களுக்கும் அதிகமான டெபாசிட்டுக்கு 6.60% வருடாந்திர வட்டியை வழங்குகிறது, இந்த வங்கியில் எஃப்டி கணக்கு திறக்க குறைந்தது ரூ.10,000 டெபாசிட் செய்ய வேண்டும்.