ஜோதிடத்தில் சனி பகவானின் ராசி மாற்றமும் நிலை மாற்றமும் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. நீதிக்கடவுளான சனி பகவான் கிரகங்களில் மிக முக்கியமான கிரகமாக கருதப்படுகிறார். ஒருவர் செய்யும் கர்மாக்களுக்கு ஏற்ப அவர் நல்ல மற்றும் கெட்ட பலன்களை அளிக்கிறார். ஒவ்வொரு நபரும் தனது வாழ்நாளில் ஏதாவது ஒரு கட்டத்தில் ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தையும் சனி தசையையும் எதிர்கொள்கிறார்கள். சனி பகவானை பார்த்தாலே பொதுவாக அனைவரும் அச்சப்படுவதுண்டு. ஏழரை நாட்டு சனி அல்லது சனி தசையால் பாதிக்கப்படுபவர்கள் வாழ்வில் கடுமையான சோதனைகளை அனுபவிக்கிறார்கள்.
தற்போது தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிகளில் ஏழரை நாட்டு சனியின் தாக்கம் உள்ளது. மிதுனம் மற்றும் துலாம் ராசியில் சனி தசை உள்ளது. இந்த ராசிகள் சனி பகவானுக்கான சிறப்பு பரிகாரங்களை செய்ய வேண்டும்.
ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தில் இருக்கும் 5 ராசிக்காரர்கள் சனிக்கிழமையன்று சனி சாலிசாவை பாராயணம் செய்ய வேண்டும். இதனால் சனியின் அருள் கிடைக்கும்.
அனுமனின் பக்தர்களை சனி பகவான் படுத்துவதில்லை. சனிக்கிழமையன்று அனுமன் சாலிசாவை பாராயணம் செய்வது சனியின் தொல்லைகளிலிருந்து விடுபட ஒரு சிறந்த வழியாகும்.
ஜாதகத்தில் இருக்கும் சனி தோஷத்தைப் போக்க, சனிக்கிழமையன்று சனி கோவிலுக்குச் சென்று அரச மரத்திற்கு தூய தண்ணீரை அர்ப்பணித்து வழிபடவும். பின்னர் அங்கு விளக்கேற்றி பிரார்த்தனை செய்யவும்.
ஏழைகளுக்கு தானம் செய்வதும் இல்லாதவர்களுக்கு உதவி செய்வதும் சனி பகவானின் மனதை உருக வைக்கும். இதை தவறாமல் செய்து வரவும். (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)