World Forestry Day 2024 : இன்று உலக வன பாதுகாப்பு நாள். மார்ச் 21ஆம் நாளன்ரு, வனங்களை பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ‘உலக வன நாள்’ அனுசரிக்கப்படுகிறது. பூமியில் வனங்கள் போதுமான அளவு இருந்தால் தான் மனிதர்களின் உயிர் மூச்சான ஆக்சிஜன் போதுமான அளவு கிடைக்கும். ஆனால், நகரமயமாக்கலால் வனப்பகுதிகள் தொடர்ந்து குறைந்து வருகின்றன...
நமது மொத்தப் பரப்பில் மூன்றில் ஒரு பகுதி வனங்கள் இருக்க வேண்டும் என இந்திய வனக் கொள்கைகள் (1952- 1988) கூறுகின்றன. ஆனால், இது இன்றுவரை சாத்தியமாகவில்லை. வனங்களின் முக்கியத்துவம் மற்றும் மரங்கள் அதிகமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை மக்களுக்கு உணர்த்தி விழிப்புணர்வூட்டும் வகையில் சர்வதேச வன நாள் மார்ச் 21ம் நாளன்று அனுசரிக்கப்படுகிறது...
சர்வதேச வன நாளான மார்ச் 21ம் நாளான இன்று, தமிழ்நாட்டில் அமைந்துள்ள முதுமலை தேசிய பூங்காவைப் பற்றி தெரிந்துக் கொள்வோம். தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் முதுமலை தேசிய பூங்கா அமைந்துள்ளது
முதுமலை காட்டில் அதிக உயரமான புற்கள் வளர்கின்றன. இவை 'யானை புல்' என்று அழைக்கப்படுகின்றன. அதோடு, முதுமலை வனப்பகுதியில் ராட்சத அளவிலான மூங்கில், தேக்கு, ரோஸ்வுட் போன்ற விலையுயர்ந்த மரங்கள் வளர்கின்றன
முதுமலை புலிகள் காப்பகம் என்று பெருமை பெற்றது. புலி, யானை, மான்கள், லங்கூர், மலபார் ராட்சத அணில், காட்டு நாய், கருப்பு சிறுத்தை உட்பட பல்வேறு வனவிலங்குகள் இங்கே உள்ளன
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் ஆசியாவிலேயே பெரிய வளர்ப்பு யானைகள் முகாம் இருக்கிறது. தெப்பக்காடு யானைகள் பராமரிப்பு முகாமில் ஆண்டில் சில மாதங்கள், யானைகளுக்கு சிறப்பு பராமரிப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன
இயற்கை ஆர்வலர்களுக்கு, முதுமலையின் அமைதி மற்றும் மனதை மயக்கும் அழகு மிகவும் பிடிக்கும். அத்துடன், பார்க்க முடியாத கருஞ்சிறுத்தை போன்ற விலங்குகளையும் பார்க்கும் வாய்ப்பும் வாய்கும்!
50 வகையான மீன்கள், 34 வகையான ஊர்வன, 266 வகையான பறவைகள், 55 வகையான பாலூட்டிகள் என அரிய வகை உயிரினங்கள் நிறைந்த பகுதி என்பதால் சர்வதேச அளவில் முதுமலை காடு பிரசித்தி பெற்றது. இங்கு சஃபாரி செய்ய மக்கள் ஆவலுடன் வருகின்றனர்
260 க்கும் மேற்பட்ட பறவைகளின் பல்வேறு வகைகள் இங்கு வசிக்கின்றன. இந்தியாவில் காணப்படும் பறவை இனங்களில் சுமார் 8% முதுமலையில் வாழ்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது