EPFO Pensioners Latest News: இபிஎப்ஓ ஊழியர்கள் கடைசி காலத்தில் மேலும் இரண்டு ஆண்டு காத்திருந்தால் 8 சதவீதம் கூடுதல் பென்சனாக ஓய்வூஓய்வு காலத்தில் பெறலாம்.
How To Get Extra Pension EPFO Employee: ஒரு இபிஎப்ஓ சந்தாதாரர் தனது ஓய்வூ காலத்தில் 58 வயதுக்கு பதிலாக 60 வயதில் இருந்து ஓய்வூதியம் பெறத் தொடங்கினால் 8% கூடுதல் பென்ஷன் பெறலாம். இபிஎப்ஓ ஓய்வூதியதாரர்களின் பென்ஷன் குறித்து விவரங்களை பார்ப்போம்.
இபிஎப்ஓ ஓய்வூதியதாரர்கள் எப்படி அதிக பென்ஷன் பெற முடியும்? இபிஎப்ஓ ஓய்வூதியதாரர்களுக்கு எவ்வளவு அதிக பென்ஷன் கிடைக்கும்? அதிக ஓய்வூதியம் பெற இபிஎப்ஓ ஓய்வூதியதாரர்கள் என்ன செய்ய வேண்டும்? போன்ற விவரங்களை அறிந்துக்கொள்ளுங்கள்
இபிஎஸ் என்பது இபிஎப்ஓ ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) மூலம் நடத்தப்படும் ஓய்வூதியத் திட்டமாகும். ஒவ்வொரு மாதமும் ஊழியரின் அடிப்படை சம்பளத்தில் 12 சதவீதம் மற்றும் டிஏ பிஎப் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. இதன் மூலம் ஓய்வு காலத்தில் இபிஎப்ஓ ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஓய்வூதியம் அளவு எவ்வாறு கணக்கீடு செய்யப்படுகிறது?
இபிஎப்ஓ ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் என்பது அந்த ஊழியரின் பங்களிப்பு மற்றும் வயதை பொருத்ததாகும். ஒருவர் வருங்கால வைப்பு நிதியில் பத்து வருடங்கள் தனது பங்களிப்பை செய்திருந்தால், 58 வயதை பூர்த்தி செய்து பிறகு, அவருக்கு ஓய்வூதியம் கட்டாயம் கிடைக்கும்.
அதேநேரத்தில் இபிஎப்ஓ ஊழியர்கள் 58 வயதுக்கு பதிலாக, 60 வயதில் இருந்து ஓய்வூதியம் பெறத் தொடங்கினால், அவர்களுக்கு அதிக பென்ஷன் கிடைக்க வாய்ப்புள்ளது. அதாவது 58 வயதிற்கு பதிலாக, 60 வயது முதல் ஓய்வூதியம் பெற தொடங்கினால் 8 சதவீதம் கூடுதல் பென்ஷன் தொகையை ஓய்வூதியமாக பெறலாம்.
பத்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேலான காலம் பணம் டெபாசிட் செய்து இருந்தால் இபிஎப்ஓ ஊழியர்களுக்கு ஓய்வு பெற்ற பிறகு, அதாவது 58 வயதிலிருந்து இபிஎப்ஓ நிதியில் இருந்து பென்ஷன் வழங்கப்படுகிறது.
எந்தவொரு ஊழியரும் தங்கள் சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை தொடந்து 10 வருடம் இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்து வந்தால், அந்த இபிஎப்ஓ ஊழியர் ஓய்வூதியம் பெற தகுதி பெறுவார்.
எந்தவொரு இபிஎப்ஓ ஊழியரும் இபிஎஃப் கணக்கில் 10 ஆண்டுகளுக்கு குறைவான காலம் மட்டும் பணத்தை டெபாசிட் செய்து இருந்தால் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை இடையில் எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பெறலாம்.
இபிஎப்ஓ கணக்கில் உங்களின் பத்து வருட சேவை காலம் முடிந்தாலும், உங்கள் வயது 50 முதல் 58 வயது வரை இருந்தால் மட்டுமே நீங்கள் முன்கூட்டியே ஓய்வூதியம் பெற முடியும். ஆனால் இதில் உங்களுக்கு குறைவான ஓய்வூதியம் கிடைக்கும்.
நீங்கள் 58 வயதிற்கு முன்பாக இபிஎப்-ல் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை ஓய்வூதியமாக பெற நினைத்தால், ஒவ்வொரு ஆண்டும் உங்களுக்கு கிடைக்கும் ஓய்வூதியம் 4 சதவீதம் குறையும். அதாவது ஒரு ஊழியர் 56 வயதில் மாதாந்திர ஓய்வூதியத்தை பெறுகிறார் என்று வைத்துக் கொண்டால், அதன்பிறகு அவருக்கு அடிப்படை ஓய்வூதியத் தொகையில் 92 சதவீதம் மட்டுமே கிடைக்கும்.
இபிஎப்ஓ கணக்கில் நீங்கள் பத்து வருடத்திற்கு மேலாக பணத்தை டெபாசிட் செய்திருந்தாலும், உங்களுக்கு 50 வயதுக்கு குறைவாக இருந்தால் ஓய்வூதியத் தொகையை கோர முடியாது. அத்தகைய சூழ்நிலையில் வேலையை விட்டு நீங்கள் வெளியேறினால், நீங்கள் இபிஎப் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட நிதியை மட்டுமே பெறுவீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இபிஎப்ஓ ஊழியர் 58 வயதுக்கு பதிலாக, 60 வயது முதல் ஓய்வூதியத் தொகை பெறத் தொடங்கினால், அவருக்கு சாதாரணமாக கிடைக்கும் ஓய்வூதியத் தொகையை விட 8 மடங்கு அதிக ஓய்வூதியத் தொகையை பெறலாம்.