Krishna jayanthi Celebrations : விஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ கிருஷ்ணர், மதுராவின் இளவரசி தேவகி மற்றும் அவரது கணவர் வசுதேவரின் எட்டாவது குழந்தையாக பிறந்து, கோகுலத்தில் நந்தகோபர்-யசோதாவின் மகனாக வளர்ந்தவர்....
பிறப்பதற்கு முன்னரே எதிரியை சம்பாதித்த பெருமையும் கிருஷ்ணருக்கே உண்டு. தாய்மாமன் கம்சன், கிருஷ்ணரை கொல்வதற்காக செய்த சதிகளை முறியடித்த கண்ணனின் பிறப்பை உலகமே விமரிசையாக கொண்டாடுகிறது...
மதுராவில் பிறந்த குழந்தை வளர்ந்ததோ ஆயர்பாடியில்... மதுராவின் மைந்தனின் மண் பட்டு மகிழ்ந்தது பிருந்தாவன பூமி
ஆவினங்களை மேய்க்கும் இனத்தில் வளர்ந்த கண்ணனுக்கு பிடித்தமானது வெண்ணெய்... வெண்ணெயை திருடித் தின்பதில் இருந்த சுகத்தால், கண்ணனுக்கு வெண்ணெய்த் திருடன் என்ற பெயரே உண்டு
ஆயர்பாடியில் வளர்ந்த கண்ணன், சுட்டியும் குறும்பும் செய்வதில் சமர்த்தன். சாமர்த்தியமாய் பிறரை ஏமாற்றுவதிலும் வல்லவராம் கிருஷ்ணர்
கண்ணன் என்றாலே, ஆவினங்கள், பால், வெண்ணெய், ஆயர்பாடி, புல்லாங்குழல் இசை என பல விஷயங்கள் கண் முன் தோன்றும்
கண்ணனின் வாழ்க்கையில் அவர் செய்யாத மாயங்களே இல்லை என்பதால், மாயக் கண்ணன் என்ற பெயரும் அவருக்கு உண்டு. மாயக் கண்ணனின் உபதேசங்களில் மிகவும் முக்கியமானது அர்ஜூனனின் தேரோட்டியாக மாறி, உலகிற்கு கண்ணன் உபதேசித்த பகவத்கீதை
வாழ்க்கையை அனுபவித்து வாழுங்கள் என்பதையும் இசையின் மகத்துவத்தையும் சொல்லிக் கொடுத்த தெய்வர் கண்ணன்
கண்ணனின் புல்லாங்குழலில் இருந்து எழும் தேவகானத்திற்கு மயங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது
ஆவணி மாத கிருஷ்ண பக்ஷ அஷ்டமி திதி நாளில் பகவான் கிருஷ்ணரின் அருளை பெறுவதற்காக விரதம் அனுசரித்து பூஜைகள் செய்வது வழக்கம். ஜென்மாஷ்டமி அன்று உறியடி விழா நடைபெறுவது வழக்கம்
உணவுப்பிரியரான கண்ணனுக்கு பிடித்த பட்சணங்களை செய்து கோகுலாஷ்டமியன்று படைபப்து வழக்கம்