Things That You Should Not Gift Your Friends : உங்கள் நண்பர்களுக்கு ஒரு சில பொருட்களை பரிசு பொருளாக தரவே கூடாது. அவை என்னென்ன தெரியுமா?
Things That You Should Not Gift Your Friends : நண்பர்களுக்குள் பரிசு கொடுத்து கொள்வது சகஜம். பிறந்தநாள், வருடப்பிறப்பு, திருமண நாள், ஸ்பெஷலான நாள் என அனைத்து நாட்களிலும் பரிசு கொடுக்கலாம். ஒரு சில நண்பர்கள், வெளியூர் சென்றால் அங்கு அவர்களின் நண்பர்களுக்கு பிடித்த ஏதேனும் பொருட்களை கூட வாங்கி கொடுப்பர். ஆனால், நண்பர்களுக்குள் கொடுத்துக்கொள்ள கூடாத சில பொருட்கள் இருக்கின்றன.அவற்றை கொடுத்தால் நண்பர்கள் பிரிய கூட நேரிடுமாம். அவை என்னென்ன தெரியுமா?
நண்பர்களுக்கு வளர்ப்பு பிராணி அல்லது செடியை அவர்களின் அனுமதியின்றி பரிசாக கொடுக்க கூடாது. காரணம், இவை இரண்டுமே பொறுப்புடன் பார்த்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும். அந்த பொறுப்புக்கு, அவர்கள் ரெடியாக இருக்கிறார்களா இல்லையா என்பது உங்களுக்கு தெரியாமல் அதை பரிசாக கொடுக்க கூடாது.
உங்கள் நண்பர்களின் மனதை புண்படுத்தும் வகையிலான பரிசுகளை கொடுக்க கூடாது. உதாரணத்திற்கு அவர்களின் பிறந்தநாளை மறந்து விட்டு, கடைசி நேரத்தில் சம்பந்தமே இல்லாமல் ஏதோ ஒரு பொருளை வாங்கி கொடுப்பது.அல்லது கையில் கிடைத்த பொருள் விலை குறைவாக இருக்கிறது என்பதற்காக அதை வாங்கி கொடுப்பது போன்ற செயல்களை செய்யக்கூடாது.
உங்கள் நண்பர்களுக்கும், நீங்கள் கொடுக்கும் பொருட்களுக்கும் சம்பந்தமே இல்லாததாக இருக்க கூடாது. உதாரணத்திற்கு, புத்தகமே படிக்க பிடிக்காதவருக்கு புத்தகம் வாங்கி கொடுப்பது.
மறைமுகமான அர்த்தம் நிறைந்த பரிசு பொருட்களை உங்கள் நண்பர்களுக்கு வாங்கி கொடுக்க கூடாது. உதாரணத்திற்கு உங்கள் நண்பர் உடல் பருமனுடன் இருப்பதாக நீங்கள் கருதி, அவருக்கு உதவுமே என எடை பார்க்கும் கருவியையோ, அல்லது டயட் ட்ரிங்க்ஸ்களையோ வாங்கித்தர கூடாது.
காலம் கடந்த, expiry ஆன பொருட்களை உங்கள் நண்பர்களுக்கு வாங்கித்தர கூடாது.
சம்பந்தமே இல்லாமல், உங்களின் செல்வுக்கு மீறிய மிகவும் ஆடம்பரமான பொருட்களை பரிசாக கொடுக்க கூடாது. இது, அவர்களை சங்கடமான சூழலுக்கு ஆளாக்கலாம்.
உங்கள் நண்பர்களுக்கு பொருந்தாத ஆடைகளை அல்லது அணிகலன்களை வாங்கி கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
ஒரு சிலர், ஒரு நாளைக்கு வீட்டு வேலை செய்ய ஆட்களை நியமித்து பரிசாக வழங்குவர். இது அவர்களை சங்கடமடைய செய்யலாம். எனவே, இது போன்ற பொருட்களை பரிசாக கொடுப்பதற்கு முன்பு யோசிக்க வேண்டும்.