Overeating Arhar Dal Side Effects: துவரம் பருப்பை அதாவது சாம்பார் பருப்பை அதிக அளவில் சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
எந்த உணவாக இருந்தாலும் சரி அவற்றை அளவோட தான் சாப்பிட வேண்டும். அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் உடலுக்கு பல்வேறு தீங்கு விளைவிக்கும். அந்த வகையில் துவரம் பருப்பை அதிகமாக உட்கொண்டு வந்தால் உடலுக்கு பல தீங்கு விளைவிக்கும், மேலும் பல உறுப்புகளை பாதிப்படையலாம்.
அதிக அளவு துவரம் பருப்பை உட்கொள்வது உங்கள் சர்க்கரை அளவை அதிகரிக்கலாம். இது நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கலாம்.
அளவுக்கு அதிகமாக துவரம் பருப்பை உட்கொண்டால் உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும். இதனால், மூட்டுவலி, வாத நோய் போன்றவை ஏற்படலாம்.
சிலருக்கு துவரம் பருப்பை அதிகமாக உட்கொண்டால் ஒவ்வாமை பிரச்சனை ஏற்படலாம்.
துவரம் பருப்பில் அதிகளவு கலோரிகள் உள்ளதால், இவை உடல் எடையை அதிகரிக்கலாம்.
துவரம் பருப்பில் அதிக அளவு புரதம் உள்ளதால், இதை அதிகமாக உட்கொண்டால் சிறுநீரக பிரச்சனை ஏற்படலாம்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.