இயற்கையாக கிடைக்கும் உணவு பொருட்கள் அனைத்தும் நமக்கு எவ்வித பின்விளைவுகளுமின்றி உடல் ஆரோக்கியத்தை வழங்குகிறது.
செலரி, வெள்ளரிக்காய், இஞ்சி மற்றும் புதினா சேர்த்து அரைத்தெடுக்கப்படும் சாறை குடித்துவர உங்கள் உடலில் இயற்கையாகவே கொலஸ்ட்ரால் குறையும், இதில் சுவைக்காக பிங்க் உப்பு சேர்த்துக்கொள்ளலாம்.
நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்த சியா மற்றும் ஆளி விதைகள், பச்சை காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் பெர்ரி வகைகளை சாப்பிடுவதால் இயற்கையாகவே உடலில் கொலஸ்ட்ரால் படிவதை தடுக்கிறது.
உடல் எடையை நிர்வகிக்கவும், கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும் ஓட்ஸ் பயன்படுகிறது. ஓட்ஸ் சாப்பிடுவதால் நீண்ட நேரம் வயிறு நிறைவான உணர்வு எற்பட்டு அதிகமாக உணவு உட்கொள்வது தடுக்கப்படுகிறது.
புரத சத்து அதிகம் நிறைந்த முட்டை, சால்மன், பன்னீர், பச்சை பட்டாணி, கொண்டைக்கடலை, கிட்னி பீன்ஸ், பருப்புகள், முளைகட்டிய தானியங்கள் மற்றும் இறால்கள் போன்றவற்றை சாப்பிடுவதும் உடல் எடையை நிர்வகிக்க பயன்படுகிறது.
நெய், அவகேடோ, நட்ஸ் வகைகள், ஆலிவ் எண்ணெய் போன்றவை நல்ல கொலஸ்ட்ரால் என்பதல்ல அவற்றை சிறிதளவு உங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம்