இந்த முறைகளை கடைபிடித்தால் போதும்! கொலஸ்ட்ராலைக் குறைக்கலாம்!

உடலில் தங்கக்கூடிய கெட்ட கொலஸ்ட்ரால் ஸ்லோ பாய்சன் போல செயல்பட்டு உங்களுக்கு மரணத்தை கொடுக்க கூடிய ஆபத்தான ஒன்று ஆகும்.

 

 

1 /5

இயற்கையாக கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.  உதாரணமாக ஓட்ஸ், கிட்னி பீன்ஸ், ஆப்பிள் மற்றும் ப்ரஸல்ஸ் ஸ்ப்ரவுட்ஸ், மோர், சால்மன், அக்ரூட் பருப்புகள் மற்றும் ஆளிவிதைகள் போன்ற ஒமேகா-3 நிறைந்த உணவுகளை தினமும் டயட்டில் சேர்த்து கொள்ளலாம்.  

2 /5

மது அருந்துவதால் ஏற்படும் பல்வேறு பாதிப்புகளில் கெட்ட கொலஸ்ட்ராலும் ஒன்று, நீங்கள் எதாவது ஒரு சந்தர்ப்பங்களில் மது அருந்த நேரும்போது குறைவான அளவே பருகுங்கள்.  முடிந்தவரை மது அருந்துவதை தவிர்ப்பது உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை ஏற்படுத்தாது.  

3 /5

உடல் எடை அதிகமாக இருந்தால் கெட்ட கொலஸ்டராலின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும், இதனால் தமனிகள், ரத்த நாளங்கள், கல்லீரல் போன்றவை பாதிக்கப்படும்.  அதனால் உடற்பயிற்சி, டயட் போன்றவற்றை கடைபிடித்து உடல் எடையை குறையுங்கள்.  

4 /5

புகைபிடிப்பது இதயத்திற்கு ஆரோக்கியமானதல்ல, இது முழு உடலையும் பாதிப்பிற்குள்ளாக்குகிறது.  மேலும் இது உங்கள் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் என்கையை அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகிறது.  

5 /5

உட்காரும் நேரத்தை குறைத்துக்கொண்டு அதிகளவில் உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது பல்வேறு விதமான நோய்களுக்கு தீர்வளிக்கிறது.படுப்பது, உட்காருவது இவற்றை தவிர்த்து நடைப்பயிற்சி, நீச்சல், சைக்கிள் ஓட்டுவது, ஓடுவது, நடனமாடுவது போன்ற எதாவது உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது நல்லது.