நம்பமுடியாத விலை, அசத்தல் அம்சங்கள்: பெட்ரோல் ஸ்கூட்டர்களை விட மலிவாக கிடைக்கும் இ-ஸ்கூட்டர்கள்

Most Affordable Electric Scooters: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மின்சார ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், குறைந்த விலையில் கிடைக்கும் மின்சார ஸ்கூட்டரை நீங்கள் வாங்க விரும்பினால், இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

 

குறைந்த விலையில், சிறந்த செயல்திறனுடன் கிடைக்கும் ஸ்கூட்டர்களை பற்றி இந்த பதிவில் காணலாம். அவற்றின் விலைகள் ரூ.45,000 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) இலிருந்து தொடங்குகின்றன. பெட்ரோல் மூலம் இயங்கும் சில ஸ்கூட்டர்களின் விலையும் இதை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

1 /4

எக்ஸ்-ஷோரூம் விலை: ரூ.45,000 அவான் இ ஸ்கூட்டியின் விலை ரூ.45,000 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) ஆகும். இது 215 வாட் பிஎல்டிசி மோட்டார் உடன் வருகிறது. இதன் 48v/20ah பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆக 6-8 மணிநேரம் ஆகும். இந்த மின்சார ஸ்கூட்டர் 65 கிமீ/சார்ஜ் வரம்பை தருவதாகவும், மணிக்கு 24 கிமீ வேகத்தில் செல்லும் என்றும் நிறுவனம் கூறுகிறது.

2 /4

எக்ஸ்-ஷோரூம் விலை: ரூ.45,099 பவுன்ஸ் இன்பினிட்டி இ1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இரண்டு வகைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேட்டரி பேக் இல்லாத இன்பினிட்டி இ1 இன் விலை ரூ.45,099 மற்றும் பேட்டரி பேக் கொண்ட இன்பினிட்டி இ1 விலை ரூ.68,999 ஆகும். இது 1500 வாட் பிஎல்டிசி மோட்டார் உடம் வருகிறது. இது 85 கிமீ/சார்ஜ் வரை செல்லும்.

3 /4

எக்ஸ்-ஷோரூம் விலை: ரூ.46,640 ஹீரோ எலக்ட்ரிக் ஃப்ளாஷ் விலை ரூ.46,640ல் தொடங்கி ரூ.59,640 வரை செல்கிறது. இந்த இ-ஸ்கூட்டர் இரண்டு வகைகளில் கிடைக்கிறது - எல்எக்ஸ் விஆர்எல்ஏ மற்றும் டாப் வேரியண்ட் ஃப்ளாஷ் எல்எக்ஸ். ஹீரோ எலக்ட்ரிக் ஃப்ளாஷ் அதிகபட்சமாக மணிக்கு 25 கிமீ வேகம் கொண்டது மற்றும் 85 கிமீ/சார்ஜ் வரம்பைக் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

4 /4

எக்ஸ்-ஷோரூம் விலை: ரூ.56,900 அவன் டிரெண்ட் இ-இன் விலை ரூ. 56,900 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) ஆகும். ஒற்றை-பேட்டரி பேக் மற்றும் இரட்டை-பேட்டரி பேக் என இரண்டு வகைகளில் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒற்றை-பேட்டரி இயங்கும் மாறுபாடு 60 கிமீ வரம்பைக் கொண்டுள்ளது. இரட்டை-பேட்டரி இயங்கும் மாறுபாடு 110 கிமீ வரை வரம்பைக் கொண்டுள்ளது. இரண்டு வகைகளின் அதிகபட்ச வேகம் மணிக்கு 45 கிமீ ஆகும்.