தினமும் ஒரு கிளாஸ் மாதுளை ஜூஸ் குடித்தால்... கிடைக்கும் நன்மைகள் இத்தனையா...!

மாதுளை பழத்தில் ஜூஸ் செய்து குடிப்பது உடலுக்கு நல்லது மட்டுமின்றி, உங்களின் உடலையும் நீரேற்றமாக வைத்திருக்கும். அந்த வகையில், மாதுளை ஜூஸ் குடித்தால் கிடைக்கு் நன்மைகள் குறித்து இந்த புகைப்படத்தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம். 

  • Feb 11, 2024, 08:24 AM IST

மாதுளையை அதன் தோலை உரிக்க சோம்பேறிப்பட்ட பலரும் அதனை சாப்பிடாமல் தவிர்பார்கள், ஆனால் யாரெனும் அவர்களுக்கு பழத்தை உரித்துக்கொண்டுத்தால் நன்றாக சாப்பிடுவார்கள். எப்போதும் மாதுளையை உரித்துக்கொடுக்கும் நபர்கள் அருகிலேயே இருக்க மாட்டார்கள், அதனால் மாதுளையை சாப்பிடுவதும் அரிதாகிவிடும். அந்த வகையில், கடைகளில் மாதுளை பழ ஜூஸை அருந்துவது நன்மை பயக்கும்.

1 /7

கோடை காலம் நெருங்கிவிட்டது. இனி தாகத்திற்கு ஜூஸ்களை குடித்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவோம். அந்த வகையில், தாகத்திற்கு சோடா அல்லது கார்பனேற்றப்பட்ட பானங்களை குடிக்காமல் பழங்களின் சாற்றை அருந்துவது உங்களுக்கு ஊட்டச்சத்தை தரும். பழமோ அல்லது ஜூஸோ இவை அனைத்தும் உங்கள் உடலை தெம்பாகவும், நீரேற்றமாகவும் வைத்திருக்கும்.   

2 /7

அந்த வகையில், மாதுளம் பழத்தில் பல வகை ஊட்டச்சத்துக்கள் கொட்டிக்கிடக்கின்றன. குறிப்பாக, நாட்டு மாதுளம் பழத்தை ஜூஸ் போட்டு, தினமும் ஒரு கிளாஸ் குடித்து வந்தால் பல நன்மைகள் வந்துசேரும். அந்த வகையில் முக்கிய 5 நன்மைகளை தொடர்ந்து காணலாம்.   

3 /7

ரத்த அழுத்தம் குறையும்: மாதுளம் ஜூஸை தினமும் குடிப்பதன் மூலம் ரத்த நாளங்களின் அழுத்தத்தைக் குறைக்கவும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. இது ரத்த அழுத்த அளவை மேலும் குறைத்து ஆரோக்கியமான இதயத்திற்கு வழி வகுக்கும்.  

4 /7

இதயத்திற்கு நல்லது: மாதுளை கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும், ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும் என தெரிவிக்கப்பட்டது. இதய தமனிகளில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் மாதுளை உதவும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, இது இதயத்தை வலுப்படுத்தவும், இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் மாதுளை உதவுகிறது.   

5 /7

அழற்சி எதிர்ப்பு: மாதுளையில் ஆக்ஸிஜனேற்றங்கள் நல்ல அளவிலவ் உள்ளன. குறிப்பாக, அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை செல்களை பாதுகாக்க உதவும். சில ஆய்வுகளின்படி, மாதுளை ஜூஸை தொடர்ந்து குடித்து வருவதால், புற்றுநோய் உருவாகும் அபாயத்தைக் குறைக்கலாம் என கூறப்படுகிறது.  

6 /7

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்: மாதுளையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க அவசியமானதாகும். சமீப காலமாக திடீரென அதிகரித்து வரும் தொற்று மற்றும் வைரஸை எதிர்த்துப் போராடுவது முக்கியமாகிறது.  

7 /7

செரிமானம்:  மாதுளை ஜூஸில் உணவு நார்ச்சத்து உள்ளது, இது சிறந்த செரிமானத்திற்கு உதவும். செரிமான பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் பெற உதவுகிறது.