நல்ல ஆரோக்கியத்திற்காக பல பழங்கள் மற்றும் காய்கறிகளைசாப்பிடுவது சிறப்பான பலனைக் கொடுக்கும். இருப்பினும், அவற்றைச் சரியான முறையில் உண்ணும் முறையைத் தெரிந்து கொண்டால் மட்டுமே முழுமையான பலனைப் பெற முடியும்.
பழங்களை சாப்பிடும் சரியான முறை பற்றி குறிப்பிடுகையில், சில பழங்களை தோலுடன் சாப்பிடுவதால் மட்டுமே நன்மையை முழுவதுமாக பெற முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
சில பழங்களை தோலுரித்த பிறகு சாப்பிடுவதால், அவற்றின் தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து பெருமளவு குறைகிறது. தோல்களை நீக்கி விட்டு சாப்பிடக் கூடாத 5 பழங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
பிளம் தோலில் நார்ச்சத்து மற்றும் பல வைட்டமின்கள் உள்ளன. எனவே, பிளம் பழத்தை தோல் நீக்கிய பின் சாப்பிட்டால், ஊட்டசத்துக்கள் பலவற்றை இழந்து விடுவோம்.
ஆப்பிள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது ஆனால் அதை எப்போதும் தோலுடன் சாப்பிட வேண்டும். தோலை நீக்கிய பின் சாப்பிடுவதால் அதன் பலன்கள் குறையும். ஆப்பிள் தோலில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் உள்ளன, அவை அதன் தோலுடன் அகற்றப்படுகின்றன. இவ்வாறு தோலுரித்த ஆப்பிளை சாப்பிடுவதால் பல சத்துக்கள் குறைகிறது.
சப்போட்டாவையும் அதன் தோலுடன் சாப்பிட வேண்டும். தோல் இல்லாமல் சாப்பிடுவதால் எந்த பலனும் இல்லை. இதன் தோலில் வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் உள்ளன.
பழங்களில் பேரிக்காய் கூட தோலுடன் சாப்பிட்டால் மட்டுமே அதிக நன்மை பயக்கும் பழமாகும். பேரிக்காய் தோலை நீக்கிய பின் சாப்பிட்டால் அதன் சத்து பெரிதும் குறைகிறது. இதன் தோலில் நார்ச்சத்து உள்ளது. நார்ச்சத்து சாப்பிடுவதால் வயிறு ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
பிளேட்லெட்டுகளை அதிகரிக்க கிவி சிறந்த பழம். இது டெங்கு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பெரும்பாலானோர் அதை தோலுரித்த பிறகு சாப்பிடுவார்கள். ஆனால் கிவியின் தோலில் பழத்தை விட அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன. கிவியை தோலுரித்த பிறகு சாப்பிடுவதால், பலனை முழுமையாக பெற முடியாது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.