Do These 7 Things During New Year 2025 : புது வருடம் பிறக்க, இன்னும் கொஞ்ச நாட்களே இருக்கிறது. இந்த நிலையில், சரியாக டிசம்பர் 31ஆம் தேதி 12 மணிக்கு சில விஷயங்களை செய்தால், உங்கள் வாழ்க்கையில் எதிர்பார்க்காத அதிர்ஷ்டம் அடிக்கும் என கூறப்படுகிறது.
Do These 7 Things During New Year 2025 : புது வருடம், பிறப்பதற்கு இன்னும் வெகு சில நாட்களே இருக்கிறது. பலரும், அடுத்த வருடம் “இதை செய்ய வேண்டும், அதை செய்ய வேண்டும்” என்ற பிளானை வைத்திருப்போம். அதற்கான முயற்சிகளை நாம் எடுத்தாலும் அதற்கு இந்த பிரபஞ்சமும் சேர்ந்து நமக்கு உதவி செய்ய வேண்டும். நீங்கள் அடுத்த வருடத்தில் பெரிய உயரத்தை அடைய நினைத்தால், வரும் டிசம்பர் 31ஆம் தேதி, இரவு 12 மணிக்கு, புது வருடம் பிறப்பதற்கு முன்னர் சில விஷயங்களை செய்ய வேண்டும். இதில் குறிப்பிடப்படும் 7 விஷயங்களில் ஏதேனும் ஒரு விஷயத்தை செய்தாலே போதும்.
ஆரஞ்சு, ஆப்பிள், மாதுளை போன்ற உருண்டையாக இருக்கும் பழங்களை சாப்பிட வேண்டும். இது, உங்களுக்கு புது வருடத்தில் நல்ல செய்தியையும் பண வரவையும் கொண்டு வர உதவலாம்.
உங்கள் வாழ்வில், நிறைய இனிப்பான விஷயங்கள் நடக்க, நல்ல மனிதர்களை சந்திக்க எதையாவது ஸ்வீட்டாக செய்து சாப்பிடலாம்.
செல்வம் வந்து தங்குமிடம் சுத்தமாக இருக்க வேண்டும். எனவே, உங்கள் பணம் வைக்கும் பர்ஸை நன்றாக சுத்தம் செய்து அதில் கொஞ்சம் காசை போட்டு வைக்க வேண்டும்.
பண மழை உங்கள் மீது கொட்ட, நாணயத்தினை சுண்டி விட வேண்டும். இது, உங்களுக்கு எதிர்பாராத ஆசிர்வாதங்களை கொண்டு வந்து சேர்க்கும்
நீங்கள் பயணம் செய்ய விரும்புபவராக இருந்தால், ஒன்றுமே இல்லாத சூட்கேஸை எடுத்துக்கொண்டு உங்கள் வீட்டு வாசலை தாண்டி சென்று விட்டு மீண்டும் வீட்டிற்குள் வரலாம்.
உங்கள் ஆசைகள் எல்லாம் நிறைவேற வேண்டுமென நினைத்தால், அதை எல்லாம் ஒரு கடிதத்தில் எழுதி அதனை நெருப்பில் எரிக்க வேண்டும்.
ஏதேனும் 12 ஆசைகளை நினைத்துக்கொண்டு, அவை நிறைவேற வேண்டும் என நினைத்து, மேஜைக்கு அடியில் அமர்ந்து 12 திராட்சைகள் சாப்பிட வேண்டும். இப்படி செய்தால், கண்டிப்பாக அந்த ஆசைகள் அடுத்த வருடத்தில் நிறைவேற நிறைய வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.