Lucky Zodiacs of New Year 2025: இன்னும் சில நாட்களில், புத்தாண்டு 2025 பிறக்க உள்ளது. சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி உட்பட பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகளும் சேர்க்கைகளும் இருப்பதால், கிரகப் பெயர்ச்சியைப் பொறுத்தவரை 2025 ஆண்டு மிக முக்கியமானதாக இருக்கும்.
நமது சூரிய குடும்பத்தில் மிக மெதுவாக நகரும் கிரகம் சனி கிரகம். அதே சமயம், மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாகவும் கருதப்படுகிறது. ஆடம்பரத்தையும், அழகையும், வசதியையும் அள்ளிக் கொடுக்கும் சுக்கிரன், ஒரு மாத காலத்தில் தனது ராசியை மாற்றிக் கொள்பவர். சனி கிரகத்தின் பெயர்ச்சி மட்டுமல்லாது, அது பிற கிரகங்களுடன் இணைவதும், ஒருவரின் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் என்கிறார்கள் ஜோதிடர்கள்.
சனி சுக்கிரன் யுதி: ஜோதிடக் கணக்கீடுகளின்படி, 2025 புத்தாண்டுக்கு முன்னர் டிசம்பர் 28 ஆம் தேதி, சுக்கிரன் ஏற்கனவே சனி அமைந்துள்ள கும்பத்தில் பெயர்ச்சியாக உள்ளாரர் இதனால், கும்ப ராசியில் சனி சுக்கிரன் இணைவு உருவாகும். இந்த அற்புதமான சேர்க்கை காரணமாக 2025 புத்தாண்டு எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட பலன் தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.
அதிர்ஷ்ட ராசிகள்: கிரக சபெயர்ச்சிகள் மட்டுமல்லாது, அதனால் உருவாகும் கிரகங்களின் சேர்க்கைகளும், கிரக நிலைகளில் ஏற்படும், வக்ர நிலை, வக்ர நிவர்த்தி போன்ற பிற மாற்றங்களும் ராசிகள் அனைத்தையும் பாதிக்கும் நிலையில், சனி - சுக்கிரன் சேர்க்கை காரணமாக 4 ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்ட பலன்களைப் பெறப் போகிறார்கள் என்கின்றனர் ஜோதிடர்கள்.
ரிஷபம்: சனி மற்றும் சுக்கிரனின் இணைவு ரிஷபம் ராசிக்காரர்களுக்கு தொழில் முன்னேற்றத்திற்கான கதவுகளைத் திறக்கும். உங்கள் நிதி நிலைமை மேம்படும். பணியிடத்தில் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். அரசாங்கத்தின் உதவியும் கிடைக்க வாய்ப்பு உண்டு. உங்கள் வணிக கூட்டாளரின் ஆதரவைப் பெறுவீர்கள்.
கடகம்: சனி மற்றும் சுக்கிரனின் இணைவு கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கைக்கு வரது என முடிவெடுத்த பணம் கூட திரும்பக் கிடைக்கும். புதிய பண ஆதாரங்கள் திறக்கப்படலாம். கடக ராசிக்காரர்கள் புதிய தொழில் தொடங்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வின் பலன் கிடைக்கும். நிதி நிலைமை வலுவாக இருக்கும்.
துலாம்: சுக்கிரன் மற்றும் சனியின் இந்த இணைவு துலாம் ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல பலன்களைக் கொடுக்கும். புதிய வீடு, மனை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தாரின் ஆதரவைப் பெறுவீர்கள். நோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி, கௌரவம் உயரும் வாய்ப்புகள் கிடைக்கும்.
மகரம்: சனி மற்றும் சுக்கிரனின் இந்த சேர்க்கை மகர ராசியைச் சேர்ந்தவர்களுக்கு, வேலை மற்றும் தொழிலில் புதிய வாய்ப்புகளைத் தரும். வியாபாரத்தில் நிதி நிலைமை வலுவாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமண வாய்ப்பு உண்டாகும். வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு நிறைந்திருக்கும்.
சனி பெயர்ச்சி: 2025ம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி, நீதி கடவுள் என அழைக்கப்படும் சனி தேவன் கும்ப ராசியை விட்டு வெளியேறி மீன ராசிக்குள் நுழைகிறார். சனி தேவன் மீன ராசியில் நுழைந்தவுடன், சில ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனியின் பாதிப்புகள் நீங்கும். அதே நேரத்தில் சில ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனி காலம் தொடங்கும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.