நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கமான உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களுடன் சீரான உணவைக் உட்கொள்வது மிகவும் முக்கியம்.
சில பழங்களை உட்கொள்ளும்போது நீரிழிவு நோயாளிகளுக்கு அது 'விஷம்' ஆகலாம். நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடாத பழங்கள் எவை என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.
நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது சோர்வு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், திடீரென எடை குறைதல், பார்வை மங்குதல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட தொடங்கும்.
அன்னாசிப்பழத்தின் அதிக சர்க்கரைச் சத்து, நீரிழிவு நோயாளிகளுக்கு எதிரியாக செயல்படும். இதை ஒருபோதும் சாப்பிட வேண்டாம். இதனை எடுத்துக் கொண்டால், இரத்த குளுக்கோஸ் அளவு திடீரென அதிகரிக்கும்.
தர்பூசணி நீர்சத்து அதிகம் உள்ள சுவையான பழம். ஆனால், இதில் அதிக சர்க்கரை உள்ளடக்கம் மற்றும் அதிக கிளைசெமிக் குறியீட்டு மதிப்பெண் (76) உள்ளது. அதனால் தான் நீரிழிவு நோயாளிகள் தர்பூசணி எடுத்துக் கொள்வதைக் குறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்திற்காகவே மக்கள் கோடைகாலத்தை வரவேற்று காத்திருக்கிறார்கள். ஆனால் நீரிழிவு நோயாளிகளுக்கு இது நல்லதல்ல. ஏனெனில் இது சர்க்கரை அளவை சட்டென அதிகரிக்கிறது.
வாழைப்பழம் ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது, ஆனால் நீரிழிவு நோயாளிகளுக்கு இது நல்லதல்ல. ஏனெனில் இதன் கிளைசெமிக் குறியீட்டு மதிப்பெண் (62). இது நீரிழிவு நோயாளிகளின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
லிச்சி பழத்தில் சுமார் 16 கிராம் சர்க்கரை உள்ளது, எனவே நீரிழிவு நோயாளிகள் அதிலிருந்து விலகி இருக்குமாறு சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது