இனிப்பு சாப்பிடுவது மட்டுமல்ல... இந்த பழக்கங்களும் சுகரை எகிற வைக்கும்

Diabetes Causes: உலகெங்கிலும்  பெரும்பாலானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மோசமான வாழ்க்கை முறை இதற்கு முக்கிய காரணம்.

WHO அறிக்கையின்படி, உலகளவில் சுமார் 420 மில்லியன் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளது. மோசமான வாழ்க்கை முறை மற்றும் அதிகப்படியான இனிப்புகளை சாப்பிடுவதால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

1 /8

சர்க்கரை நோய் வருவதற்கும், சரக்கரை அளவு கட்டுக்குள் இல்லாமல் இருப்பதற்கும் இனிப்புகள் சாப்பிடுவது மட்டுமே காரணம் என்று பலர் கருதுகிறார்கள், ஆனால் சில தவறான பழக்கவழக்கங்களால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்காது என்பதுடன், சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்பும் அதிகரிக்கும்.

2 /8

மது மற்றும் புகை பிடிக்கும் பழக்கம்: மது பழக்கமும் சிகரெட் பிடிப்பதும் மக்களிடையே ஒரு பொழுதுபோக்காக மாறிவிட்டது. இது நீரிழிவை கட்டுப்படுத்த தடையாக இருக்கும். இதனால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இது இன்சுலின் எதிர்ப்பை ஏற்படுத்துவதால் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது.

3 /8

மன அழுத்தம்: இன்றைய டென்ஷன் மிகுந்த வாழ்க்கையில் மன அழுத்தம் என்பது கிட்டத்தட்ட எலோருக்கும் உள்ளது. இது தூக்கமின்மையை ஏற்படுத்தும். இதன் காரணமாக, உடலின் சர்க்காடியன் சுழற்சி சீர்குலைந்து சர்க்கரையின் அளவும் அதிகரிக்கலாம்.

4 /8

உடல் பருமன்: உடல் பருமன் சர்க்கரை நோய் மட்டுமின்றி, பல்வேறு நோய்களுக்கு காரணமாக அமைந்து, உடலை நோயின் கூடாரமாக ஆக்கி விடும். இதனால், உடல் பருமனை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம்.

5 /8

ஆரோக்கியமற்ற உணவு: உணவில் ஊட்டச்சத்து இல்லாததால் சர்க்கரையின் அளவு அதிகரிக்கலாம். நீரிழிவு மற்றும் பிற நோய்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க, உணவில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அத்தியாவசிய கொழுப்புகளை கண்டிப்பாக சேர்க்கவும்.

6 /8

உணவை தவிர்க்கும் பழக்கம்: உணவை தவிர்க்கும் பழக்கம் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும். குறிப்பாக காலை உணவை தவிர்ப்பது குளுக்கோஸ், கொழுப்பு கட்டுப்பாடு மற்றும் இன்சுலின் அளவை பாதிக்கிறது. இதன் காரணமாக சர்க்கரை நோய் அபாயம் அதிகரிக்கிறது.

7 /8

உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறை: உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதும் நீரிழிவு நோய்க்கு காரணமாக இருக்கலாம். செயலற்ற வாழ்க்கை முறை அதிக கொழுப்பு, உடல் பருமன் மற்றும் சோம்பல் போன்ற பல நோய்களுக்கு வழிவகுக்கும். ஆரோக்கியமாக இருக்க, உடற்பயிற்சிகளையும்  நடை பயிற்சிகளையும் தொடர்ந்து செய்ய வேண்டும்.

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.