தென்னிந்திய உணவில் தவிர்க்க முடியாத உணவு என்றல் அது தயிர் சாதம் தான். தயிரில் பல விதமான சத்துக்களும் பல அற்புதமான மருத்துவ குணங்கள் இருப்பதை அனைவரும் அறிந்ததே, ஆனால், அது உங்கள் மூளையை மிகவும் சுறுசுறுப்பாக்கும் என்பது பலருக்கு தெரிவதில்லை.
தயிரில் நினைவாற்றலை வலுப்படுத்தும் டிரிப்டோபன் என்ற வேதிப்பொருள் உள்ளது. இதனால் தான் தயிர் மூளைக்கான உணவாக கருதப்படுகிறது.
தயிர் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் நிறைந்த, தயிர் பற்கள் மற்றும் எலும்புகளை வலிமையாக்குகிறது.
தயிரில் உள்ள புரோபயாடிக் தன்மை உள்ளதால், செரிமான உறுப்புகள் சிறப்பாக செயல்பட உதவுகின்றன.
நீரிழிவு நோயாளிகளில் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த தயிர் உதவும்