இலங்கை போராட்டம்; கட்டுகடங்காத மக்கள்; ஆதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்

இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ஷ விலகுவார் என அறிவிக்கப்பட்ட போதிலும், போராட்டக்காரர்கள் பின்வாங்கத் தயாராக இல்லை.

 

1 /5

நாட்டில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு மத்தியில் பிரதமர் ரெனில் விக்ரமசிங்க பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். சர்வகட்சி அரசாங்கத்திடம் ஆட்சியை ஒப்படைக்க தயார் எனவும் ரனில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

2 /5

இலங்கையில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்தனர். அதிபர்பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ஷ விலகுவார் என அறிவிக்கப்பட்ட போதிலும், போராட்டக்காரர்கள் பின்வாங்கத் தயாராக இல்லை.

3 /5

ஜூலை 13 புதன்கிழமை பதவி விலகப் போவதாக கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளார். ஆனால் கோட்டாபயவின் இருப்பிடம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அதிபரின் இல்லத்தை போராட்டக்காரர்கள் கையகப்படுத்தி நீச்சல் குளத்தில் குளித்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலானது.

4 /5

கோட்டாபய ராஜினாமா செய்தால், சபாநாயகர் அபேவர்தன தற்காலிக பொறுப்பை ஏற்பார். சபாநாயகர் அதிகபட்சமாக 30 நாட்களுக்கு குடியரசுத் தலைவர் பொறுப்பில் இருக்க முடியும். புதிய கூட்டணி அரசு இன்னும் ஒரு வாரத்தில் பதவியேற்கும்.

5 /5

 நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு இராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கோட்டாபய பதவியில் இருக்கும் வரை அவர் பாதுகாக்கப்படுவார் என்றும் இராணுவம் தெரிவித்துள்ளது.