திருமணத்திற்கு முன்பே தந்தையான கிரிக்கெட் வீரர்கள்

திருமணத்திற்கு முன்பே தந்தையான வீர ர்களின் பட்டியலை இங்கு தெரிந்து கொள்வோம். 

 

1 /6

இந்திய கிரிக்கெட் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா திருமணத்திற்கு முன்பே தந்தையானார். அவர் மட்டுமல்ல சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பலர் திருமணத்திற்கு முன்பே தந்தையாகியுள்ளனர்.  

2 /6

ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர் டேவிட் வார்னரும் திருமணத்திற்கு முன்பே தந்தையானார். டேவிட் வார்னர் மற்றும் அவரது மனைவி கேண்டீஸ் வார்னர் ஆகியோர் 2014 ஆம் ஆண்டு முதல் மகளை பெற்றெடுத்தனர். இருவரும் 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

3 /6

சச்சின் டெண்டுல்கரின் சிறந்த நண்பர் வினோத் காம்ப்ளி. அவர் தனது முதல் மனைவி நோயெலா லூயிஸிடமிருந்து விவாகரத்துக்குப் பிறகு ஃபேஷன் மாடல் ஆண்ட்ரியா ஹெவிட்டுடன் இணைந்தார். இருவரும் டேட்டிங் செய்து கொண்டிருக்கும்போதே ஆண்ட்ரேயா தாய்மை அடைந்தார். குழந்தை பெற்றெடுத்த பிறகே இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தனர்.   

4 /6

இங்கிலாந்து அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டனான ஜோ ரூட்டும் திருமணம் செய்து கொள்ளாமல் தந்தையானார். ஜோ ரூட் மற்றும் அவரது காதலி கேரி கார்டெல், 2016 ஆம் ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். ஆனால் திருமணத்திற்கு முன்பே ரூட் தந்தையாகிவிட்டார். 7 ஜனவரி 2017 ஆம் தேதி கோர்டெல், மகன் ஆல்ஃபிரட்டைப் பெற்றெடுத்தார். அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

5 /6

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இம்ரான் கானும் திருமணம் செய்து கொள்ளாமல் தந்தையானார். சீதா வைட் என்பவரை காதலித்தார். அவர்கள் இருவருக்கும் 1992-ல் குழந்தை பிறந்தது. முதலில் இம்ரான் மறுத்தாலும், டிஎன்ஏ பரிசோதனையில் அது இம்ரானின் குழந்தை என்பது உறுதியானது.  

6 /6

யுனிவர்ஸ் பாஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ் கெய்லும் திருமணத்திற்கு முன்பே தந்தையானார். 2017 ஆம் ஆண்டில், அவரது காதலி நடாஷா பெரிட்ஜ் மகளைப் பெற்றெடுத்தார். குழந்தையை பெற்றெடுத்த பிறகே இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.