சூடான உடலை குளிர்ச்சியாக மாற்ற சூப்பர் ஜூஸ்..! 5 நிமிடத்தில் செய்துவிடலாம்

உடல் சூடாக இருந்தால், அதனை குளிர்ச்சியாக்க வெறும் 5 நிமிடத்தில் தயார் செய்யக்கூடிய ஒரு சூப்பர் ஜூஸ் உள்ளது. அதனை எப்படி தயார் செய்யலாம்? என்பதையும் பார்க்கலாம். 

 

வயிறு சூடாக இருந்தால் அதனை குளிர்ச்சியாக்க இயற்கையாகவே சில வழிமுறைகள் இருக்கின்றன. அந்தவகையில் வெறும் ஐந்து நிமிடத்தில் தயார் செய்யக்கூடிய ஒரு சூப்பர் ஜூஸ், அதன் நன்மைகளையும் தெரிந்து கொள்ளலாம். 

 

1 /8

ஒரு சிலருக்கு மழைகாலம் தொடங்கியிருந்தாலும் உடம்பு சூட்டால் அவதிப்படுகின்றனர். அவர்கள் எப்போது எங்கு சென்றாலும் வியர்த்து கொட்டும். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட, பாதாம் பிசினால் செய்யப்படும் ஜூஸை குடித்தால் போதும். 

2 /8

ஏனென்றால் பாதாம் பிசின் குளிர்ச்சியை தரக்கூடியது. இதனை குடித்தால் உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். பாதாம் பிசின் மூலம் எப்படி ஜூஸ் தயாரிக்கலாம் என்பதை இங்கே பார்க்கலாம். 

3 /8

வயிறு குளிர்ச்சியாக வைத்திருக்க தயாரிக்கக்கூடிய பாதாம் பிசின் ஜூஸூக்கு  தேவையான பொருட்கள் : பாதாம் பிசின், சியா விதைகள், எலுமிச்சை, உப்பு, பொதீனா

4 /8

இதைச் செய்ய, முதலில் பாதாம் பிசினை எடுத்து, அதை நன்கு கழுவி தண்ணீரில் ஊற வைக்கவும். அதை ஒரு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். சியா விதைகளையும் சிறிது நேரம் ஊற வைக்கவும். 

5 /8

ஜூஸ்  போடும்போது ஒரு ஸ்பூன் பாதாம் பிசின், சியா விதைகள், எலுமிச்சை சாறு, ஒரு சிட்டிகை உப்பு, புதினா இலை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலக்கவும். இப்போது ஜூஸ் ரெடி. 

6 /8

பாதாம் பிசினில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது நீர்ச்சத்து குறைபாட்டை தடுக்கும். அத்துடன் இயற்கை நச்சு மருந்தாகவும் செயல்படுகிறது. இந்த விதைகளில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, அவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. 

7 /8

அதேசமயம் சியா விதைகள் மிகவும் சத்தானவை. அவை ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், ஆக்ஸிஜனேற்றிகள், நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்களையும் கொண்டிருக்கின்றன. 

8 /8

ஒமேகா -3 போன்ற கொழுப்பு அமிலங்கள் ஹார்மோன் சமநிலைக்கு உதவும். இதுதவிர இது செரிமான ஆரோக்கியத்திற்கும் உதவியாக இருக்கும்.