Health Tips In Tamil: ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு சீராக இருப்பதே உடல்நலனுக்கு நல்லது. அந்த வகையில், சிலருக்கு குறைவாக இருக்கும் ஹீமோகுளோபின் அளவை உயர்த்த அன்றாடம் சாப்பிட வேண்டிய பழங்களை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.
Blood Hemoglobin Level: ஆண்கள், பெண், குழந்தைகள், கைக்குழந்தைகள் என அவரவர் வயதிற்கு ஏற்ப ஹீமோகுளோபினின் இயல்பான அளவு மாறுபடும். அந்த வகையில், வயது வந்த ஆண்களுக்கு 13.5 முதல் 17.5 வரையிலும், வயது வந்த பெண்களுக்கு 11.5 முதல் 15.5 வரையிலும் இருப்பது இயல்பாகும்.
ஸ்ட்ராபெரி: இதில் வைட்டமின் சி, ஆண்டிஆக்ஸிடன்ட்ஸ் அதிகமாக உள்ள நிலையில் ஹீமோகுளோபின் அளவை உயர்த்தும் எனலாம்.
கொய்யா: இதில் வைட்டமிண் சி மற்றும் இரும்புச்சத்து அதிகமுள்ளது. இது இயற்கையாகவே ஹீமோகுளோபின் அளவை உயர்த்தும்.
தர்பூசணி: இதிலும், ஆண்டிஆக்ஸிடன்ட்ஸ், வைட்டமின் சி அதிகமாக உள்ளதால் ஹீமோகுளோபின் அளவை உயர்த்த இதுவும் பயனளிக்கும்.
வாழைப்பழம்: வைட்டமிண் சி மற்றும் போட்டாஸியம் உள்ளதால், வாழைப்பழம் ஹீமோகுளோபின் அளவை உயர்த்தும்.
ஆப்பிள்: இதில், இரும்புச் சத்துடனும் வைட்டமிண் சி இருப்பதால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை சீராக வைத்திருக்க உதவும்.
மாதுளை: இதில் இருக்கும், வைட்டமிண் சி, இரும்புச்சத்து, ஆண்டிஆக்ஸிடண்ட்கள் ஹீமோகுளோபின் அளவை எகிற வைக்கும்.
பொறுப்பு துறப்பு: ஹீமோகுளோபின் அளவு உங்களுக்கு எந்தளவிற்கு உள்ளது என்பதை காண முதலில் பரிசோதனை செய்து, அதன்பின் மருத்துவரை அணுகுங்கள். இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை என்பதால் இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். இந்த தகவல்களுக்கு ZEE MEDIA பொறுப்பேற்காது என்பதை வாசகர்கள் கவனிக்க வேண்டும்.