Health News: அதிக காபி குடிப்பதால் ஏற்படும் ஆபத்து!!

இன்றைய வாழ்க்கை முறையில் தினமும் காலை எழுந்தவுடன் காபி குடிப்பது பெரும்பாலான மக்களின் பழக்கமாக உள்ளது. சில விஷயங்களை நமக்கு பிடிக்கும். ஆனால், சில விஷயங்களில் நமக்கு ஏற்படும் பிடிப்பு நம்மை அவற்றின் அடிமைகளாகவே மாற்றிவிடும். அப்படிப்பட்ட ஒன்றுதான் காபி. காபி குடித்தால் தூக்கம் தூரமாய் போய்விடும் என்பது அனைவரும் அறிந்ததே. காபி நம் உடலுக்கு உடனடி சுறுசுறுப்பை அளிக்கின்றது. எனினும், அதிகமாக காபி குடிப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், அதிகமாக காபி குடிப்பதால் பல பிரச்சனைகள் வர ஆரம்பிக்கும். 

1 /4

பலர் வேலை சோர்வை போக்க காபியை நாடுகிறார்கள். ஒரு நாளைக்கு ஆறு கப் காபி குடித்தால் டிமென்ஷியா போன்ற மூளை நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக நம்பப்படுகிறது. இது தவிர மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களும் வரலாம். அதிகமாக காபி குடிப்பதால் உடல் ஆரோக்கியத்துக்கு வரக்கூடிய பாதிப்புகள் குறித்து இந்த பதிவில் காணலாம். 

2 /4

காலையில் எழுந்தவுடன் காபி குடிக்கும் பழக்கம் இருந்தால், கவனமாக இருங்கள். ஏனெனில் அதிகமாக காபி குடிப்பதால் உங்களுக்கு பல பிரச்சனைகள் வரலாம். காபி குடிப்பது சோம்பலை நீக்கி உங்களை விழித்திருக்க உதவும் என்று நம்பப்படுகிறது. ஆனால் அதிக காஃபின் உட்கொள்வது இரவில் தூக்கத்தை கெடுத்துவிடலாம். இது உங்கள் உறக்க முறையைத் தொந்தரவு செய்யலாம்.  

3 /4

தூக்கம் மட்டுமல்ல, காபி உங்கள் வாயு பிரச்சனையையும் அதிகரிக்கிறது. காபி குடிப்பதால் உடலின் பல பாகங்களில் பாதிப்புகள் ஏற்படும் என்பது பலருக்கும் தெரியும். காபி குடிப்பது வயிற்றின் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்யும் கேஸ்ட்ரின் என்ற ஹார்மோனை வெளியிடுகிறது. காபியை அதிகமாக உட்கொண்டால், அது வயிற்றுப் பிரச்சனைகளை உண்டாக்கும்.

4 /4

இதய நோயாளிகள் காபி குடிப்பதில் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. உயர் இரத்த அழுத்தம் நோயாளிகளின் செல்களை சேதப்படுத்தும். இதன் காரணமாக இதயத்திற்கு இரத்த ஓட்டம் குறையும். இதன் காரணமாக, பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற ஆபத்துகள் அதிகரிக்கின்றன. ஆகையால், நீங்கள் உயர் இரத்த அழுத்த நோயாளியாக இருந்தால், காபி குடிப்பதில் மிகவும் கவனமாக இருக்கவும்.  (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)