துபாயில் இருந்து TV ஸ்பீக்கரில் நூதன முறையில் தங்கக் கடத்தல், 23 வயது பயணி கைது

உளவுத்துறை தகவலின் அடிப்படையில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மொஹமத் பதுருதீன் என்ற 23 வயது இளைஞரை சுங்கத்துறை அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.  

எமிரேட்ஸ் விமானம் ஈ.கே.-544 வழியாக துபாயில் இருந்து வந்த பயணி மிகவும் பதற்றமாக இருந்தார். விசாரணைக்கு அழைத்தபோது அவரின் பதற்றம் மேலும் அதிகரித்தது.  

Also Read | Corona Pilot Scheme of England: மாஸ்கும் இல்லை, சமூக இடைவெளியும் இல்லை…

1 /4

எமிரேட்ஸ் விமானம் ஈ.கே.-544த்தில் துபாயில் இருந்து வந்த பயணி மிகவும் பதற்றமாக இருந்தார். விசாரணைக்கு அழைத்தபோது அவரின் பதற்றம் மேலும் அதிகரித்தது.  

2 /4

அதில் 57.75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1.2 கிலோ எடையுள்ள இரண்டு தங்கக் கட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

3 /4

அவரது பொருட்கள் மற்றும் செக்-இன் சாமான்களைத் தவிர, அவர் எடுத்துச் சென்ற 55 அங்குல எல்.ஈ.டி டிவியும் பரிசோதிக்கப்பட்டது.  டிவியின் பின்புற பேனலைத் திறந்தபோது, ஸ்பீக்கர்ர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கனமான கருப்பு செவ்வகக் கம்பிகளை அதிகாரிகள் கண்டறிந்தனர். 

4 /4

டிவியில் இருந்த தங்கக் கட்டிகள் இரண்டும் மீட்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. பயணி கைது செய்யப்பட்டார்.