Personal loan: மலிவான தனிநபர் கடன் கொடுக்கும் வங்கி எது? வட்டி விகிதம் & கட்டணங்கள்!

Lowest Interest Rate And Personal Loan EMIs : திடீரென்று ஏற்படும் பணத் தேவைகளின்போது தனிநபர் கடன் எனப்படும் பர்சனல் லோன்கள் நல்ல விருப்பமாக இருக்கின்றன. எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் தனிநபர் கடன்கள் வழங்காப்படுகின்றன. இவை மாதாந்திர தவணைகளில் திருப்பி செலுத்தப்படுகின்றன... 

தனிநபர் கடனில் வசூலிக்கப்படும் வட்டி விகிதங்கள் மற்றும் செயலாக்கக் கட்டணங்கள் வங்கிக்கு வங்கி மாறுபடுகின்றன. மிகவும் மலிவான விலையில் வங்கிக் கடன் வழங்கும் வங்கிகள் எவை? தெரிந்துக் கொள்வோம்...

1 /7

மக்களின் அவசரத் தேவைகளுக்காக தனிநபர் கடன் வழங்கப்படுகிறது. எந்தவிதமான பிணையமோ உத்தரவாதமோ இல்லாமல் கிடைக்கும் கடனை வாங்க குறைந்தபட்ச ஆவணங்கள் தேவை என்பதும், இந்த கடனை எந்த நிதி தேவைக்கும் பயன்படுத்தலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது

2 /7

தனிநபர் கடனும் ஒப்புக் கொள்ளப்பட்ட விதிமுறைகளின்படி திருப்பிச் செலுத்தப்படுகிறது. தனிநபர் கடன்கள் இஎம்ஐ அதாவது மாதாந்திர தவணைகளில் திருப்பிச் செலுத்தப்படுகிறது. 

3 /7

HDFC வங்கி 10.50%  வட்டியில் தனிநபர் கடனைத் தருகிறது. ஐந்தாண்டு காலகட்டத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கினால் மாத இஎம்ஐ 2,149 ரூபாயாக இருக்கும். இந்த கடனுக்கு செயலாக்கக் கட்டணம் ரூ.4,999 வரை இருக்கலாம்...  

4 /7

டாடா கேபிடல், 10.99%  வட்டியில் தனிநபர் கடனைத் தருகிறது. ஐந்தாண்டு காலகட்டத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கினால் மாத இஎம்ஐ 2,174 ரூபாயாக இருக்கும். இந்த கடனுக்கு செயலாக்கக் கட்டணம் 5.5% வரை இருக்கலாம்...  

5 /7

ஸ்டேட் பேங்க் ஆஃப் இண்டியா, 11.15% முதல் 15.30% வரையிலான வட்டியில் தனிநபர் கடனைத் தருகிறது. ஐந்தாண்டு காலகட்டத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கினால் மாத இஎம்ஐ 2,182-2,395 ரூபாயாக இருக்கும். பாரத ஸ்டேட் வங்கி செயலாக்கக் கட்டணம் வசூலிப்பதில்லை  

6 /7

ஐசிஐசிஐ வங்கி 10.80% வட்டியில் தனிநபர் கடனைத் தருகிறது. ஐந்தாண்டு காலகட்டத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கினால் மாத இஎம்ஐ 2,164 ரூபாயாக இருக்கும். இந்த கடனுக்கு செயலாக்கக் கட்டணம் 2.50% வரை இருக்கலாம்...  

7 /7

பேங்க் ஆஃப் பரோடா 11.05% முதல் 18.75% வரை வட்டியில் கடன் வழங்குகிறது. மாதாந்திர தவணையாக 2,177 ரூபாய் முதல் 2,580 வரை கட்ட வேண்டியிருக்கும். செயலாக்கக் கட்டணம் 2% வரை (குறைந்தபட்சம் ரூ. 1,000 மற்றும் அதிகபட்சம் ரூ. 10,000) இருக்கலாம்