புதன் கிரகம் ஜூன் 19ஆம் தேதி ரிஷப ராசியில் அஸ்தமிப்பதால், தனது சக்தியை இழக்கிறார். இதனால், சில ராசிக்காரர்களின் பிரச்சனைகள் அதிகரிக்கப் போகிறது.
புதனின் நிலை வலுவாக இருந்தால் எல்லா வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். ஏனென்றால், அறிவுத்திறன் மற்றும் புத்திசாலித்தனத்தின் காரணி புதன். மறுபுறம், புதன் அமைவதால், ராசிக்காரர்கள் பலத்த இழப்புகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
புதன் கிரக அஸ்தமனம்: ஒரு கிரகம் சூரியனுக்கு மிக அருகில் வரும் போது, அஸ்தனமன் ஆகிறது. அப்போது கிரகம் அதன் அனைத்து சக்திகளையும் இழக்கிறது. இந்நிலையில், ஜூன் 19, 2023 அன்று காலை 7.16 மணிக்கு புதன் ரிஷப ராசியில் அஸ்தமனம் ஆவதால் 4 ராசிக்காரர்களின் பிரச்சனைகளை அதிகரிக்கும்.
அறிவுத்திறன் மற்றும் புத்திசாலித்தனத்தின் காரணி புதன். புதனின் நிலை வலுவாக இருந்தால் எல்லா வேலைகளிலும் வெற்றி உண்டு. மறுபுறம், புதன் அமைவதால், ராசிக்காரர்கள் பலத்த இழப்புகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
மிதுனம்: புதன் அஸ்தமிப்பதால் மிதுன ராசிக்காரர்கள் தொழில் துறையில் சில சவால்களை சந்திக்க நேரிடும். சரியான முடிவுகளைப் பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். பணியிடத்தில் உங்கள் பணிக்கு போதுமான பாராட்டு கிடைக்காது. உத்தியோகத்தில் சில தடைகளை சந்திக்க வேண்டி வரும். உங்கள் வருமானத்தில் நீங்கள் முழுமையாக திருப்தி அடைய மாட்டீர்கள். சேமிப்பதிலும் சிக்கல் ஏற்படும்.
சிம்மம் : புதன் அஸ்தமிப்பதால் சிம்ம ராசிக்காரர்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்காது. நீங்கள் முழுமையாக திருப்தி அடைய மாட்டீர்கள். உங்கள் விருப்பங்களை நிறைவேற்ற முடியாமல் போகும். வேலையில் அதிக அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.பணியிடத்தில் மேலதிகாரி மற்றும் அதிகாரிகளின் முன்னிலையில் கௌரவம் பாதிக்கப்படலாம். வியாபாரத்திலும், திட்டமிட்டு இயங்க வேண்டும், இல்லையெனில் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
விருச்சிகம்: புதன் அஸ்தமிப்பதால் பாதுகாப்பின்மை உணர்வு ஏற்படலாம். சரியான முடிவுகளை எடுப்பதில் உங்களுக்கு இடையூறு ஏற்படலாம். உங்கள் தொழிலில் வேலை அழுத்தம் அதிகரிக்கும். உங்கள் கடின உழைப்புக்கு போதுமான பாராட்டு கிடைக்காது. அலுவலகத்தில் கூட மூத்தவர்களின் ஆதரவு கிடைக்காது. உங்கள் நிதி நிலை பாதிக்கப்படலாம். இதன் காரணமாக நீங்கள் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
தனுசு - தனுசு ராசிக்காரர்களுக்கு புதன் அஸ்தமிப்பதால் சாதகமான பலன் இருக்காது. வேலையை முறையாக செய்யாவிட்டால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்காது. கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்காது. நிதி நிலையும் சொல்லிக் கொள்ளும் படி இருக்காது. வணிகர்களுக்கு இந்த காலகட்டம் மிகவும் சவாலானதாக இருக்கலாம். எனவே நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.