Second hand car வாங்கணுமா? மிகச்சிறந்த கார்களின் பட்டியல் இதோ

புதுடில்லி: கார் வாங்குவது என்பது பலரது கனவாக உள்ளது. அனைவராலும் புதிய கார்களை வாங்க முடிவதில்லை. பொருளாதார நிலை காரணமாக சிலர் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்குகிறார்கள். சிலரோ, செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்கி அதில் நன்றாக ஓட்டி பழகிய பின்னர் புதிய காரை வாங்க விரும்புகிறார்கள். 

இந்த நிலையில், செகண்ட்ஹேண்ட் கார் வாங்க பலவித ஆப்ஷன்கள் தற்போது உள்ளன. செகண்ட்ஹேண்ட் கார் வாங்க முடிவெடுத்த பிறகு, எந்த காரை வாங்கலாம் என்ற கேள்வி வருகிறது. அனைத்து வகைகளிலும் திறம் வாய்ந்த, உங்கள் பணத்துக்கு மதிப்பு அளிக்கக்கூடிய, பிரபலமான, சில நல்ல செகண்ட் ஹேண்ட் கார்களைப் பற்றி இங்கு நீங்கள் தெரிந்து கொள்ளலாம். 

1 /6

Wagon R இந்த பிரிவில் மிகவும் பிரபலமான கார் ஆகும். மாருதி நிறுவனம் Wagon R-ன் இந்த வகையை 2019 -ல் அறிமுகப்படுத்தியுள்ளது. உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால், இந்த காரை நீங்கள் நல்ல விலையில் பெறலாம். புதிய Wagon R-ன் ஷோரூம் விலை சுமார் ரூ .4.19 லட்சம் முதல் ரூ .5.69 லட்சம் ஆகும்.

2 /6

மாருதி நிறுவனத்தின் பிரபலமான ஹேட்ச்பேக் கார் ஸ்விஃப்ட்டின் பெட்ரோல் மாடலும் மிகவும் பிரபலமானது. எட்டு முதல் பத்து ஆண்டு பழைய மாருதியின் இந்த காரை இரண்டு முதல் மூன்று லட்சம் ரூபாயில் வாங்கலாம். இந்த கார் மக்களுக்கு பிடித்தமான கார்களில் ஒன்றாகும். அதன் சக்திவாய்ந்த எஞ்சின் மற்றும் அதிக இடம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  

3 /6

இந்த கார் குறைந்த பட்ஜெட் கார் ஆகும். இந்த கார் மைலேஜிலும் சக்தி வாய்ந்தது. புதிய ஆல்டோ 800 எல்எக்ஸ்ஐயின் அதிகாரப்பூர்வ விலை பற்றி பேசினால், இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ .4.14 லட்சத்துக்கும் அதிகமாகும். மேலும் இது நிறுவனத்தின் அதிக விற்பனையான கார்களில் ஒன்றாகும். எட்டு முதல் பத்து ஆண்டு பழைய ஆல்டோவை ட்ரூ வேல்யூ மூலம் வாங்கினால், 1.50 முதல் இரண்டு லட்சத்துக்குள் வாங்கி விடலாம். 

4 /6

தற்போது, ​​இந்த கார் மாருதியின் சிறந்த கார்களில் ஒன்றாகும். இந்த காருக்கு சந்தையில் அதிக கிராக்கி உள்ளது. இந்த வாகனம் மைலேஜ், இட வசதி, வடிவமைப்பு மற்றும் வண்ணம் என அனைத்திலும் கலக்கலாக உள்ளது. இந்த கார் ஆல்பா, டெல்டா, ஜீட்டா போன்ற வகைகளில் வருகிறது. ஆல்பாவை ரூ .4.5 லட்ச என்ற துவக்க விலையில் வாங்கலாம். டெல்டா மற்றும் ஜீட்டாவுக்கு இன்னும் கொஞ்சம் அதிகமாக செலுத்த வேண்டி இருக்கும்.   

5 /6

மாருதி சுசுகி ஸ்விஃப்ட் டிசைர் அதன் சிறந்த வடிவமைப்பு, மைலேஜ் மற்றும் அம்சங்கள் காரணமாக நிறுவனத்தின் சிறந்த விற்பனையான கார்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த காரின் விலை ரூ .6.81 லட்சத்திலிருந்து தொடங்கி ரூ .10.20 லட்சம் வரை செல்கிறது. ஆனால் எட்டு முதல் பத்து ஆண்டு பழைய காரை, கார் சந்தையில் இருந்து ரூ .3.50 லட்சம் என்ற ஆரம்ப விலையில் வாங்கலாம்.

6 /6

ஹூண்டாயின் இந்த கார் மிகவும் பிரபலமானது. இந்த காரின் புத்தம் புதிய மாடல் டெல்லியில் எக்ஸ்ஷோரூமில் ரூ .9,99,990 என்ற விலையில் தொடங்குகிறது. கிரெட்டாவின் செகண்ட் ஹேண்ட் காரை ரூ .3.50 லட்சம் என்ற துவக்க விலையிலிருந்து வாங்கலாம்.