குரு பெயர்ச்சி 2023: இந்த ராசிகளுக்கு பம்பர் அதிர்ஷ்டம், அமோகமான ராஜ வாழ்க்கை, முழு ராசிபலன் இதோ

Guru Peyarchi 2023: பஞ்சாங்க கணக்கீடுகளின்படி, தேவகுரு வியாழன் 22 ஏப்ரல் 2023, அதாவது இன்று அதிகாலை மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சியானார். மேஷம் முதல் மீனம் வரை, அனைத்து ராசிகளிலும் குரு பெயர்ச்சியால் ஏற்படவுள்ள மாற்றங்களை பற்றி இந்த பதிவில் காணலாம். 

குரு பகவான் அறிவாற்றல், கல்வி, தொண்டு மற்றும் சந்ததிகளின் காரக கிரகமாக இருக்கிறார். இன்று மேஷ ராசியில் பெயர்ச்சியான குரு பகவான், மே 1, 2024 வரை இங்கு அமர்ந்திருப்பார். இன்று அட்சய திருதியையும் கொண்டாடபடுகின்றது. 500 வருடங்கள் கழித்து, அட்சய திருதியை அன்று குரு பெயர்ச்சியாகும் யோகம் அமைகிறது. 

1 /12

தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு இந்த காலம் சாதகமாக இருக்கும். தொழிலில் வெற்றி பெறுவார்கள். காதல் விவகாரங்களிலும் அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும். ஆனால் திருமண வாழ்க்கையில் அலட்சியம் ஆதிக்கம் செலுத்தும். உறவில் பரஸ்பர அன்பும் புரிதலும் குறையும். உங்கள் துணையை ஏமாற்றுவது உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கும்.  

2 /12

வியாழன் பன்னிரண்டாம் வீட்டில் இருப்பதால் வெளிநாட்டில் இருந்து ஆதாயம் உண்டாகும். வேலை சம்பந்தமாக வெளியூர் பயணங்களுக்கு செல்ல வேண்டியும் வரலாம். திருமண வாழ்க்கையில் தொடர்ந்து ஏற்ற தாழ்வுகள் இருக்கும். எதிரி தரப்பு வெற்றிபெற முயற்சிக்கும், ஆனால் நீங்கள் உங்கள் புரிதலுடன் அனைத்தையும் கையாளுவீர்கள்.

3 /12

மிதுன ராசிக்காரர்களுக்கு வியாழனின் சஞ்சாரம் சாதகமாக இருக்கும். வியாபாரிகளுக்கும் அதிக லாபம் ஈட்டுவது எளிதாகி வருகிறது. உங்கள் துறையுடன் தொடர்புடைய மற்றவர்களுடன் நீங்கள் தொடர்பு கொள்வீர்கள், இது எதிர்காலத்தில் உங்களுக்கு மங்களகரமான பலன்களை அளிக்கும். பணியின் காரணமாக தொடர்ந்து வெளியூர் பயணம் மேற்கொள்ள நேரிடும்.  

4 /12

வரவிருக்கும் நேரம் எதிர்மறையாகவே உள்ளது. நீங்கள் எதைச் செய்தாலும் அதை மிகவும் சிந்தனையுடன் செய்யுங்கள். வணிகத்திற்கும் நேரம் சாதகமற்றதாக இருக்கும், விரிவாக்கம் தொடர்பான திட்டங்களை சிறிது காலத்திற்கு ஒத்திவைக்கவும். இருப்பினும், அரசு வேலை செய்பவர்களுக்கு எல்லா வகையிலும் அதிர்ஷ்டம் கிடைக்கும்.  

5 /12

சிம்ம ராசிக்காரர்களுக்கு வியாழன் பெயர்ச்சி கலவையான அதிர்ஷ்டத்தைத் தருகிறது. வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைத்தாலும் அதில் திருப்தி அடைய முடியாது. நீங்கள் அரசு வேலை செய்யும் நபராக இருந்தால், அதில் இடமாற்றத்தை சந்திக்க வேண்டியிருக்கும். வியாபாரத்தில் புதிய ஆர்டர்கள் மூலம் லாபம் கிடைக்கும், ஆனால் கூட்டாண்மை வியாபாரத்தில் பங்குதாரருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நஷ்டம் ஏற்படும்.

6 /12

வெளிநாட்டில் தொழில் செய்யும் கன்னி ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். நேரம் சரியாக இருக்காது. மாணவர்களும் தேர்வில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வேலையில் இருப்பவர்கள் முன் பணி நிமித்தமான கவலைகள் எழலாம். எச்சரிக்கையாக இருந்தால் நீங்களும் பாதுகாப்பாக இருப்பீர்கள்.

7 /12

நீங்கள் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க விரும்பினால் கவனமாக இருங்கள். குரு பெய்ரச்சி உங்களுக்கு அனைத்து வகையிலும் சாதகமாக இருக்கும், ஆனால் பேராசையின் விளைவு மோசமாக இருக்கும். தற்போதைய வேலையில் பதவி உயர்வு அல்லது புதிய மற்றும் சிறந்த வேலை கிடைக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் உறுதியாக இருங்கள்.

8 /12

குரு பெயர்ச்சி விருச்சிக ராசியினருக்கு தொழில் ரீதியாக ஏற்ற தாழ்வுகளை தருகிறது. புதிய வேலைகளைத் தொடங்குவதைத் தவிர்க்கவும். வெளிநாட்டில் வேலை செய்தால் அதிக லாபம் கிடைக்கும். ஆனால் நாட்டில் தொழில் அல்லது வேலை செய்பவர்கள் பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும். தற்போதைக்கு புதிய திட்டம் தொடங்கும் எண்ணத்தை சிறிது காலம் தள்ளி வைப்பதே பொருத்தமாக இருக்கும்.

9 /12

தனுசு ராசி வியாபாரிகளுக்கு நேரம் மங்களகரமாக உள்ளது. நீங்கள் அலுவல பணி புரியும் நபராக இருந்தால், உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு இரண்டும் கிடைக்கும். வியாபாரிகளுக்கும் புதிய சலுகைகள் கிடைக்கும். மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறுவார்கள். திருமண உறவுகள் இனிமையாக இருக்கும். குடும்பத்துடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள்.  

10 /12

குரு பெயர்ச்சி மகர ராசிக்கு சாதகமாக இருக்கும். குறிப்பாக, கேரியர் கிராஃப் நன்றாக உயரும். உத்தியோகஸ்தர்களின் உதவியால் பதவி உயர்வு உண்டாகும். சமூகத்தில் மரியாதையையும் பெறுவீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பாராட்டுகளையும் பெறுவீர்கள்.

11 /12

கும்ப ராசிக்காரர்கள் அதிக வேலைச் சுமையால் சிரமப்படுவார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பின்மையால் மனது வருத்தமும் இருக்கும். இருப்பினும், இப்போது வேலையை விட்டுவிடுவது பற்றி யோசிக்க வேண்டாம். வியாபாரிகள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். குடும்பத்தினரின் ஆதரவை எதிர்பார்க்காதீர்கள்.

12 /12

பணி மாறுதல் அல்லது இடமாற்றத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. பணி நிமித்தமாக வெளியூர் செல்ல நேரிடலாம். புதிய திட்டத்தில் சேரவும் வாய்ப்புகள் உண்டு. பொருளாதார நிலை வலுவாக இருக்கும். குடும்பத்திற்கு சாதகமாக இருக்கும் நேரமாக இது இருக்கும்.