Budhaditya Yoga : மிதுன ராசியில் மகா யோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்

ஜூலை 2 ஆம் தேதி புதன் மிதுன ராசிக்கு மாறினார். கிரகங்களின் ராஜாவான சூரியன் ஏற்கனவே மிதுன ராசியில் உள்ளார். இவ்வாறு மிதுனத்தில் புதன் - சூரியன் இணைவது புதன் ஆதித்ய யோகத்தை உருவாக்குகிறது. அதேசமயம் சூரியன் கிரகம் வருகிற ஜூலை 15 வரை மிதுன ராசியில் இருப்பார். அந்தவகையில் தற்போது இந்த புதன் ஆதித்ய யோகம் அனைத்து ராசிகளிலும் நல்ல பலன் தருவார். அதேசமயம் ஜோதிடத்தில் புதன் ஆதித்ய யோகம் மங்களகரமானதாகவும் முக்கியமானதாகவும் கருதப்படுகிறது. மிதுன ராசியில் உருவாகும் புதன் ஆதித்ய யோக சுபமாக அமையும். எனவே எந்த ராசிக்காரர்களுக்கு இதன் சிறப்பு பலன் கிடைக்கும் என்பதாகி தெரிந்துக்கொள்வோம்.

1 /5

கும்பம்: மிதுன ராசியில் புதன்-சூரியன் இணைவதால் உருவாகும் புதாதித்ய யோகம் கும்ப ராசியினருக்கு பலமான நிதிப் பலன்களைத் தரும். எந்த ஒரு பெரிய காரியத்தையும் குடும்ப உறுப்பினர்களின் உதவியால் செய்து முடிப்பீர்கள். கௌரவம் அதிகரிக்கும். கல்வித்துறை சார்ந்தவர்களுக்கு இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும்.

2 /5

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு புத்தாதித்ய யோகம் நல்ல பலனை தரும். வேலை தேடுபவர்கள் நல்ல வெற்றியைப் பெறலாம். தொழில்முனைவோரின் பெரிய ஒப்பந்தங்கள் உறுதிப்படுத்தப்படலாம். திருமண வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும். 

3 /5

துலாம்: துலாம் ராசிக்காரர்கள் இந்தக் காலத்தில் பல நன்மைகளைப் பெறுவார்கள். பணம் வரவு சாதகமாக இருக்கும். மதம் மற்றும் ஆன்மிக நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள். வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் பெருகும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும்.

4 /5

கன்னி: புதன்-சூரியன் சேர்க்கை கன்னி ராசியினருக்கு நிறைய பலன்களைத் தரும். நிதி நிலை வலுவாக இருக்கும். திடீரென்று எங்கிருந்தோ பணம் வரவி உண்டாகும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். நம்பிக்கை அதிகரிக்கும். இதனால், அனைத்து பணிகளையும் எளிதாக முடிக்க முடியும்.

5 /5

மிதுனம்: புதன்-சூரியன் சேர்க்கை கன்னி ராசியினருக்கு நிறைய பலன்களைத் தரும். நிதி நிலை வலுவாக இருக்கும். திடீரென்று எங்கிருந்தோ பணம் வரும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். நம்பிக்கை அதிகரிக்கும். இதனால், அனைத்து பணிகளையும் எளிதாக முடிக்க முடியும்.     (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளதன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)