Honda Car Discount offer: கார் வாங்கும் எண்ணத்தில் உள்ளீர்களா? அப்படியென்றால், உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு உள்ளது. ஹோண்டா தனது வாடிக்கையாளர்களுக்கு கார்களை வாங்க பெரும் தள்ளுபடியை வழங்குகிறது. ஹோண்டாவின் அமேஸ், சிட்டி, ஜாஸ் போன்ற வாகனங்களில் வாடிக்கையாளர்கள் பெரும் சலுகைகளைப் பெறுகின்றனர். இதில் ரூ.72,000 வரை சேமிக்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும், இந்த சலுகை டிசம்பர் 31, 2022 வரை மட்டுமே பொருந்தும். எந்தெந்த ஹோண்டா கார்களில் வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி கிடைக்கின்றது என்பதை இந்த பதிவில் காணலாம்.
நியூ ஹோண்டா அமேசில், ரூ. 10,000 வரையிலான ரொக்கத் தள்ளுபடி கிடைக்கிறது. பரிமாற்ற சலுகையாக ரூ. 20,000, கஸ்டமர் லாயல்டி போனஸ் ரூ. 5,000 மற்றும் கார்பரேட் தள்ளுபடியாக ரூ.6,000 ஆகியவையும் இதில் உள்ளன.
ஹோண்டா சிடி ஃபிஃப்த் ஜெனரேஷன் காரில், ரூ. 30,000 வரையிலான ரொக்கத் தள்ளுபடி கிடைக்கிறது. பரிமாற்ற சலுகையாக ரூ. 20,000, கஸ்டமர் லாயல்டி போனஸ் ரூ. 5,000 மற்றும் கார்பரேட் தள்ளுபடியாக ரூ.8,000 ஆகியவையும் இதில் உள்ளன.
ஹோண்டா City 4th Generation காரில் கஸ்டமர் லாயல்டி போனஸ் ரூ. 5,000 கிடைக்கிறது.
ஹோண்டா WR-V காரில், ரூ. 30,000 வரையிலான ரொக்கத் தள்ளுபடி கிடைக்கிறது. பரிமாற்ற சலுகையாக ரூ. 20,000, கஸ்டமர் லாயல்டி போனஸ் ரூ. 5,000 மற்றும் கார்பரேட் தள்ளுபடியாக ரூ.5,000 ஆகியவையும் இதில் உள்ளன.
ஹோண்டா ஜாஸ் காரில், ரூ. 10,000 வரையிலான ரொக்கத் தள்ளுபடி கிடைக்கிறது. பரிமாற்ற சலுகையாக ரூ. 10,000, கஸ்டமர் லாயல்டி போனஸ் ரூ. 5,000 மற்றும் கார்பரேட் தள்ளுபடியாக ரூ.3,000 ஆகியவையும் இதில் உள்ளன.