டைட்டில் வின்னர் அர்ச்சனாவுக்கு கொடுக்கப்பட்ட மொத்த பரிசுத்தொகை எவ்வளவு?

Bigg Boss 7 Tamil Title Winner Archana: பிக்பாஸ் 7 தமிழ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அர்ச்சனா அறிவிக்கப்பட்டார். இவர் பிக்பாஸ் தொடரில் வருவதற்கு முன்னர் என்ன செய்துகொண்டிருந்தார் என்பதை இதில் காணலாம்.

  • Jan 14, 2024, 23:29 PM IST
1 /7

பிக்பாஸ் 7 தமிழ் நிகழ்ச்சியின் இறுதி நாள் எபிசோட் இன்று விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்பட்டது. இன்று மாலை 6 மணி முதல் கிராண்ட் ஃபினாலே ஒளிபரப்பப்பட்டது.   

2 /7

கருப்பு நிற ஆடையில் இறுதிநாள் நிகழ்வை தொகுத்தி வழங்கினார் கமல்ஹாசன். அவர் தனது நடிப்பு வாழ்வு குறித்தும், தற்போது நடித்து வரும் Thug Life படத்தின் பெயர் காரணம் உள்பட பல கருத்துகளை இந்நிகழ்வில் பேசியிருந்தார்.  

3 /7

அர்ச்சனா, மணிசந்திரா, மாயா கிருஷ்ணன், தினேஷ், விஷ்ணு ஆகியோர் கடைசி 5 போட்டியாளராக இருந்தனர்.   

4 /7

இதில், விஷ்ணு, தினேஷ், மாயா ஆகியோர் அடுத்தடுத்து வெளியேற கடைசியில் மணிசந்திரா மற்றும் அர்ச்சனா ஆகியோர் மீதம் இருந்தனர்.  

5 /7

அர்ச்சனா வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார். வெற்றிக்கு பின் பேசிய அர்ச்சனா,"நான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வரும்போது எனக்காக இவ்வளவு பேர் இருப்பார்கள் என்பது எதிர்பார்க்கவில்லை. இதை சாம்பாதிப்பேன் என நான் எதிர்பார்க்கவில்லை. மக்களுக்கு நன்றி" என்றார்.    

6 /7

இதில் அர்ச்சனா வெற்றி பெற்று முதல் பரிசுக்கான ரூ.50 லட்சம் தொகை, ஜி ஸ்கொயர் வழங்கிய ரூ.15 லட்சம் பரிசுத் தொகை, மாருதி சுசூகி நிறுவனத்தின் கிராண்ட் விட்டாரா கார் ஆகியவற்றை அர்ச்சனா வென்றார்.  

7 /7

ஆரவ், ரித்விகா, முகேன் ராவ், ராஜூ, ஆரி, அசீம் ஆகியோர் முறையே பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் முதல் ஆறு சீசன்களின் டைட்டிலை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.