ஆப்கன் அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த போட்டியின் சுருக்கத்தை இந்த புகைப்படத்தொகுப்பில் காணலாம்.
இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்ற 2ஆவது டி20 போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 172 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக குல்புதீன் நயிப் 56 ரன்களை அடித்தார். அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
173 ரன்களை இலக்காக துரத்திய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் அதிரடி தொடக்கம் அளித்தார். ரோஹித் டக் அவுட்டாக, விராட் கோலி 16 பந்துகளில் 29 ரன்கள் என அதிரடி இன்னிங்ஸை ஆடி ஆட்டமிழந்தார்.
அடுத்து தூபே உடன் களமிறங்கிய ஜெய்ஸ்வால் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்களை அலறவைத்தது எனலாம். நபி வீசிய 10ஆவது ஓவரில் தூபே ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்டு மிரட்டினார்.
ஜெய்ஸ்வால் அடிக்கும் அத்தனை பந்துகளையும் பவுண்டரிகளுக்கு விரட்டினார். ஜெய்ஸ்வால் 34 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் என 68 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 200.00 ஆகும்.
ஜித்தேஷ் டக்அவுட்டாகி வெளியேற ரிங்கு - துபே உடன் இணைந்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். 15.4 ஓவர்களிலேயே இந்தியா இலக்கை எட்டி வெற்றி பெற்றது. தூபே 32 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் என 63 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 196.00 ஆகும்.
இந்திய அணி பந்துவீச்சில் 4 ஓவர்களை வீசி 17 ரன்களை கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய அக்சர் படேல் ஆட்டநாயகனாக தேர்வானார். இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. 3ஆவது போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஜன. 17ஆம் தேதி நடைபெற இருக்கிறது.