Senior Citizen Free Travel Facility: ஹரியானா மாநில அரசு தற்போது ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்தவகையில் இனி பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் பாதி விலையில் டிக்கெட் எடுத்தால் போதும்.
தற்போது டிக்கெட் கட்டணத்தை மாநில அரசு (State Government) குறைத்துள்ளது. எனவே இனி பயணத்தின் போது மூத்த குடிமக்கள் 50 சதவிகிதம் அதாவது பாதி கட்டணத்தை (Ticket Price) மட்டும் செலுத்தினால் போதும்.
மூத்த குடிமக்களுக்கு இலவச பயண வசதி மூத்த குடிமக்களுக்கு இலவச பயண வசதிஇனி பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் பாதி விலையில் டிக்கெட் கட்டணத்தை செலுத்தினால் போதும். ஏனெனில் தற்போது டிக்கெட் கட்டணத்தை மாநில அரசு குறைத்துள்ளது. எனவே இப்போது பயணத்தின் போது மக்கள் 50 சதவிகிதம் அதாவது பாதி கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும்.
பாதி கட்டணம் மட்டுமே செலுத்த வேண்டும் இந்த சிறப்பு வசதியை மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில அரசாங்கத்தால் ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்பட்டது. மகாராஷ்டிராவில் மகிளா சம்மன் யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கான பேருந்து டிக்கெட் கட்டணம் 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மூத்த குடிமக்களுக்கும் இந்த வசதி அளிக்கப்படும். இதில், 65 முதல் 75 வயதுக்குட்பட்ட மூத்த குடிமக்கள் பயன் பெறுவார்கள், மேலும் 75 வயதுக்கு மேற்பட்ட குடிமக்கள் இலவசமாக பயணம் செய்யலாம்.
பஸ் கட்டணத்தில் தள்ளுபடி இந்தச் சலுகையானது மாநில அரசால் பேருந்துக் கட்டணத்தில் தரப்படுகிறது. இந்த வசதியை அரசு போக்குவரத்து கழகம் செய்து வருகிறது. அதன்படி மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் கட்டணத்தை ஹரியானா அரசு குறைத்துள்ளது.
இந்த வசதி ஏப்ரல் மாதம் முதல் அமல் மூத்த குடிமக்களுக்கான கட்டணம் 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தில் வசிக்கும் மக்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும். மேலும் இந்த சிறப்பு வசதியானது ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
பல மாநிலங்களிலும் இந்த வசதி உள்ளது டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பெண்களுக்கு பேருந்து பயணம் இலவசமாக வழங்கப்படுகிறது. இது தவிர, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் மூத்த குடிமக்களுக்கு பேருந்து கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டிலும் இதுபோன்ற சலுகை தமிழ்நாட்டிலும் இதுபோன்ற சலுகை சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அது மூத்த குடிமக்களுக்கானது மட்டுமல்ல; அனைவருக்கும் பொருந்தும். ஒரு மாதத்தில் 5 முறைக்கு மேல் SETC பேருந்துகளில் டிக்கெட் புக்கிங் செய்து பயணித்தால் 50 சதவீத கட்டணத் தள்ளுபடி வழங்கப்படும்.