EPFO உறுப்பினர்களுக்கு நல்ல செய்தி: ஊதிய உச்சவரம்பில் ஏற்றம் விரைவில்... அட்டகாசமான அப்டேட் இதோ

EPFO Wage Ceiling Hike: இபிஎப் திட்டத்தின் கீழ் சம்பள வரம்பு உயர்த்தப்பட்டால், பணியாளர்கள் ஓய்வு பெறும் நேரத்தில் கிடைக்கும் ஓய்வூதியத் தொகையும் உயரும். இது பணி ஓய்வுக்கு பிறகு பணியாளர்கள் பெறும் ஓய்வூதிய நன்மைகளின் அளவில் கணிசமான தாக்க்கத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

EPFO Wage Ceiling Hike: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, அதாவது EPF -ஐ கணக்கிடுவதற்கான சம்பள வரம்பை 15,000 ரூபாயில் இருந்து 25,000 ரூபாயாக உயர்த்துவது குறித்து பரிசீலிக்க தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் மத்திய நிதி அமைச்சகத்திற்கு முன்மொழிந்துள்ளதாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கோரிக்கை நீண நாட்களாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1 /9

EPFO உறுப்பினரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. இபிஎஃப் உறுப்பினர்கள் சார்பில் நீண்ட நாட்களாக வைக்கப்பட்டு வரும் ஒரு முக்கியமான கோரிக்கையில் ஒரு முக்கிய முன்னேற்றம் ஏற்படுள்ளது. அந்த கோரிக்கை என்ன? தற்போது கிடைத்துள்ள அப்டேட் என்ன? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். 

2 /9

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, அதாவது EPF -ஐ கணக்கிடுவதற்கான சம்பள வரம்பை 15,000 ரூபாயில் இருந்து 25,000 ரூபாயாக உயர்த்துவது குறித்து பரிசீலிக்க தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் மத்திய நிதி அமைச்சகத்திற்கு முன்மொழிந்துள்ளதாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கோரிக்கை நீண நாட்களாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3 /9

செப்டம்பர் 1, 2014 முதல், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதி விலக்குக்கான அதிகபட்ச ஊதிய வரம்பை 15,000 ரூபாயாக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இதற்கு முன்னர், EPFO ​​இன் கீழ் ஊழியர் பங்களிப்புக்கான ஊதிய வரம்பு ரூ.6,500 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

4 /9

ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) மத்திய அறங்காவலர் குழுவுடன் (CBT) நடந்த சந்ப்திப்புக்கு பின்னரும், பெறப்பட்ட பல்வேறு பரிந்துரைகளை பரிசீலித்த பின்னரும், தொழிலாளர் அமைச்சகம் இந்த திட்டத்தை இறுதி செய்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. CBT என்பது மத்திய அரசால் உருவாக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். எனினும், மக்களவைத் தேர்தல் முடிந்து மத்தியில் தற்போது புதிய ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், ஜூலை மாதம், நிதி அமைச்சகத்துக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டது.

5 /9

நிதி அமைச்சகம் தொழிலாளர் அமைச்சகத்தின் முன்மொழிவை அங்கீகரித்தால், அதன் தாக்கம் பணியாளர் ஓய்வூதியத் திட்டத்திற்கு அளிக்கப்படும் பங்களிப்புகள் மீது இருக்கும். அதே போல், பணி ஓய்விற்கு பிறகு பணியாளர்கள் பெறும் ஓய்வூதியத் தொகையின் மீதும் பாதிப்பு இருக்கும். 

6 /9

தற்போது, ​​ஊழியர் ஓய்வூதியத் திட்டப் பங்களிப்பு மாதத்திற்கு ரூ.15,000 என்ற அடிப்படைச் சம்பளத்தில் கணக்கிடப்படுகிறது. இதற்கான அதிகபட்ச பங்களிப்பு மாதத்திற்கு ரூ.1,250 ஆக வரம்பிடப்படுகிறது. இந்த சம்பள வரம்பு அரசால் ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டால், இந்த பங்களிப்பு ரூ.2,083 ஆக உயரும் (அதாவது ரூ. 25,000 -இல் 8.33%).

7 /9

இபிஎப் திட்டத்தின் கீழ் சம்பள வரம்பு உயர்த்தப்பட்டால், இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) ஓய்வு பெறும் நேரத்தில் கிடைக்கும் ஓய்வூதியத் தொகையும் உயரும். இது பணி ஓய்வுக்கு பிறகு பணியாளர்கள் பெறும் ஓய்வூதிய நன்மைகளின் அளவில் கணிசமான தாக்க்கத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

8 /9

ஊழியர்களின் ஓய்வூதிய (திருத்தம்) திட்டம், 2014 இன் படி, பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கிடைக்கும் ஓய்வூதியத்தைக் கணக்கிடுவதற்கான சூத்திரம் பின்வருமாறு: உறுப்பினரின் மாதாந்திர ஓய்வூதியம் = ஓய்வூதியம் பெறக்கூடிய சம்பளம் X ஓய்வூதியம் பெறக்கூடிய சேவைகாலம் / 70  (Member’s monthly pension = Pensionable salary X Pensionable service / 70). ஓய்வூதியம் பெறக்கூடிய சேவை என்பது ஒரு ஊழியர் EPF மற்றும் EPS கணக்குகளில் தீவிரமாக பங்களித்த காலத்தை குறிக்கிறது.

9 /9

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஓய்வூதியத்தை கணக்கிடுவதற்கான இந்த சூத்திரத்தில் 2014 இல் EPFO ​​ஆல் திருத்தம் செய்யப்பட்டது. இந்தத் திருத்தத்திற்கு முன், ஓய்வூதிய ஊதியம் ஒரு நபரின் கடந்த ஆண்டு சேவையின் சராசரி அடிப்படை ஊதியத்தின் மூலம் தீர்மானிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.