30 ஆண்டுகளுக்கு பிறகு கும்பத்தில் சனி: எழப்போகும் ராசிகள் எவை? விழப்போவது யார்?

Ezharai Nattu Sani: இந்த முறை ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தில் சிக்கும் ராசிகள் எது? அதற்கான நிவாரணம் என்ன என்பதைக் குறித்து பார்ப்பபோம். 

Shani Transit 2023: ஒருவர் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர்களுக்கு நன்மை மற்றும் தீமைகளை சரிசமமாக அளிக்கக்கூடியவர் தான் சனி பகவான். அதனால் தான் அவரைநீதியின் கடவுளாக கருதுகிறார்கள். ஏழரை நாட்டு சனி அல்லது சனி தசையால் பாதிக்கப்படுபவர்கள் வாழ்வில் கடுமையான சோதனைகளை அனுபவிக்கிறார்கள். ஜனவரி 17, 2023 அன்று, சனி 3 தசாப்தங்களுக்குப் பிறகு தனது மூல திரிகோண ராசியில் நுழைகிறார். இதன் காரணத்தால் சில ராசிகள் ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தில் சிக்குவார்கள், சிலருக்கு நிவாரணம் கிடைக்கும். அதுக்குறித்து பார்ப்போம்.

1 /4

சில ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கவுள்ள அதே வேளையில், சில ராசிகள் 2023 ஆம் ஆண்டின் துவக்கத்தில் ஏழரை நாட்டு சனியின் பிடியில் சிக்குவார்கள். தற்போது சனி மகர ராசியில் உள்ளார்.   

2 /4

ஜனவரி முதல் மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளில் ஏழரை நாட்டு சனியின் தாக்கம் தொடங்கும். கடகம், விருச்சிகம் ஆகிய ராசிகளில் சனி தசையின் தாக்கம் தொடங்கும்.   

3 /4

துலாம், மிதுன ராசிக்காரர்கள் மீதிருந்த சனி பகவானின் தாக்கம் படிப்படியாக குறையத் தொடங்கும். தனுசு ராசிக்காரர்களும் கடந்த ஏழு வருடங்களாக அனுபவித்த துன்பங்களிலிருந்து விடுதலை பெறுவார்கள்.  

4 /4

சனி சாலிசாவை பாராயணம் செய்யவும். எண்ணெய், கருப்பு உளுந்து, கருப்பு ஆடைகள், இரும்பு, கருப்பு போர்வை போன்ற சனி பகவானுக்கு உகந்த பொருட்களை தானம் செய்யுங்கள். சனீஸ்வரன் கோயில்களில் விளக்கு ஏற்றுவதும் நல்ல பலன் தரும். இது தவிர, பிள்ளையார், முருகர், சிவன், அம்மன் மற்றும் ஆஞ்சனேயரின் வழிபாடும் சனியின் கோபத்திலிருந்து விடுபட உதவும். (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்க: பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)