Weight Loss Tips: உடல் பருமனால் அவதியில் உள்ளீர்களா? என்று கேட்டால் பலரது பதில் 'ஆம்' என்றுதான் இருக்கும். நம்மில் பலர் தொப்பை கொழுப்பு மற்றும் அதிக எடை பிரச்சனையால் அவதியில் உள்ளோம்.
Weight Loss Tips: தற்போது மக்கள் தொப்பையை குறைக்க மிகவும் கடினமாக உழைக்கிறார்கள். சிலர் ஜிம்மிற்குச் சென்று பல மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறார்கள். சிலரோ கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். தூங்குவதற்கு முன் நீங்கள் செய்யும் செயல்கள் எடை இழப்பையும் பாதிக்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். தொப்பை கொழுப்பு குறைந்து உடல் எடை குறைய (Weight Loss) தூங்கும் முன் (Night Routine) செய்ய வேண்டிய சில முக்கிய விஷயங்களைப் பற்றி இங்கே காணலாம்.
புரதம் மற்றும் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் கொண்ட ஆரோக்கியமான இரவு உணவை உண்ண வேண்டும். இனிப்பான மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவைத் தவிர்க்கவும். உதாரணமாக, பிரவுன் ரைஸ், காய்கறிகள் போன்றவை உங்களை நிறைவாக வைத்து காலை வரை பசி எடுக்காமல் இருக்க உதவும்.
இரவு உணவை சரியான நேரத்தில் சாப்பிடுவது மிகவும் முக்கியம். இரவில் தாமதமாக உணவு சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கும். இது உங்கள் செரிமான அமைப்பையும் பாதிக்கிறது. தொப்பையை (Belly Fat) குறைக்க விரும்பினால், இரவில் சீக்கிரம் சாப்பிட முயற்சி செய்யுங்கள்.
கிரீன் டீ அல்லது புதினா டீயை இரவில் தூங்குவதற்கு முன் குடிப்பது நல்லது. இவை நமது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். இந்த ஆரோக்கியமான பானம் நமது செரிமான அமைப்புக்கு பயனுள்ளதாக கருதப்படுகிறது. எனினும், இவற்றை உட்கொண்டு சிறிது நேரம் கழித்தே தூங்க வேண்டும்.
இரவு உணவின் அளவு மிக முக்கியம். இரவில் மிக லேசான, குறைந்த அளவிலான உணவை உட்கொள்வது சிறந்தது. அதிகமாக உணவு உட்கொண்டால் அது ஜீரணம் ஆக அதிக நேரம் எடுக்கும்.
இரவில் மிக தாமதமாக தூங்குவது உடல் எடை அதிகரிப்பதற்கான மிக முக்கிய காரணமாக உள்ளது. இது நமது உடலில் சுரக்கும் ஹார்மோன்களிம் சமநிலையை பாதிக்கின்றது.
தூங்கும் வரை மொபைல் போன் பார்த்துக்கொண்டிருப்பதை நிறுத்துங்கள். எலக்ட்ரானிக் கருவிகள் மூலம் வெளிப்படும் ஒளி மூளையைத் தூண்டுகிறது. இது தூக்கத்தின் முக்கியமான ஹார்மோனான மெலடோனினை உருவாக்கும் உங்கள் திறனை அடக்குகிறது. உறங்கும் நேரத்திற்கு சற்று முன்னர் டிவி, மொபைல் போன்றவற்றை பார்க்காமல் இருப்பது நல்லது
இரவில் பல் தேப்பதால் பற்களின் ஆரோக்கியம் தவிர இன்னும் பல நன்மைகளும் உள்ளன. பல் துலக்கிய பிறகு, இரவு நேரங்களிக் ஸ்னாக்ஸ் சாப்பிட வரும் ஆசை கட்டுப்படுகிறது. இதனால் தேவையற்ற ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வது தவிர்க்கபப்டுகின்றது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.