Weight Loss Tips: உடல் பருமன் இந்நாட்களில் பலரை பாடாய் படுத்துகிறது. பல எளிய வழிகளில் உடல் எடையை குறைக்கலாம். அவற்றில் ஒரு வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Weight Loss Tips: உடல் எடை அதிகமாக உள்ளவர்கள், பல வாழ்க்கை முறைகள் மற்றும் உணவு மாற்றங்களை மேற்கொண்டு எடை இழப்புக்கு முயற்சிக்கிறார்கள். ஜிம், சைக்கிள் ஓட்டுதல், கார்டியோ மற்றும் உணவு கட்டுப்பாடு ஆகியவை எடை இழப்புக்கு அறியப்பட்ட சில பாரம்பரிய முறைகளாக உள்ளன. இன்னும் சில எளிய வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். காலையில் சில பானங்களை குடிப்பதால் எடைஇழப்பில் நல்ல உதவி கிடைக்கின்றது. தொப்பை கொழுப்பை (Belly Fat) கரைத்து உடல் எடையை குறைக்க உதவும் காலை பானங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
உடல் பருமனை குறைக்க பலர் பல வித முற்சிகளை எடுக்கிறார்கள். சிலர் ஜிம் செல்கிறார்கள். சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். எனினும் சில இயறையான எளிய வழிகளிலும் எடையை குறைக்கலாம். அப்படி ஒரு சுலபமான வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
காலையில் சில ஆரோக்கியமான பானங்களை குடிப்பதன் மூலம் , கலோரிகளை வேகமாக எரித்து, நமது தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையையும் குறைக்கலாம். இந்த பானங்கள் உடல் பருமனை குறைப்பதோடு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளையும் அளிக்கின்றன. காலையில் வெறும் வயிற்றில் சரியான பானத்தை தேர்ந்தெடுத்து குடிப்பது வளர்சிதை மாற்றத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இது மட்டுமின்றி, இது எடையை குறைக்கவும் (Weight Loss), நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கவும் உதவும். அப்படிப்பட்ட சில பானங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
எலுமிச்சை நீரில் வைட்டமின் சி மற்றும் ஆரோக்கியமான உடலுக்கு தேவையான தாதுக்கள் அதிகம் உள்ளன. எலுமிச்சை நீர் பசியைக் குறைத்து, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, தொப்பை கொழுப்பை குறைக்கவும், உடல் எடையை வேகமாக குறைக்கவும் உதவுகிறது.
வெந்தயத்தில் அதிக நார்ச்சத்து உள்ளது. இது வயிற்றுக்கு நீண்ட நேரம் நிரம்பிய உணர்வை அளிக்கின்றது. இதனால், ஆரோக்கியமற்ற, தேவையற்ற உணவுகளை நாம் உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது. வெந்தய நீரால் செரிமானமும் சீராகின்றது. இரவில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில் அதன் நீரை குடிக்கலாம். இது தவிர இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் வெந்தய நீர் மிக உதவியாக இருக்கும்.
இஞ்சியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி, மெக்னீசியம் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன. இஞ்சியை கொதிக்க வைத்து அந்த நீரை வடிகட்டி குடிப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், வளர்சிதை மாற்றம் மேம்படும். இதன் மூலம் கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டு உடல் எடை குறையும்.
கிரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாலிபினால்கள் அதிகமாக உள்ளன. இதில் உள்ள ஆரோக்கியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் காரணமாக ஆரோக்கியமான வழியில் எடை இழப்புக்கு கிரீன் டீ உதவுகின்றது. இது ஒரு சிறந்த காலை பானமாக கருதப்படுகின்றது.
ஓமத்தை இரவு முழுதும் தண்ணீரில் ஊற வைத்து காலையில் வடிகட்டி குடிக்கவும். ஓம நீர் செரிமானத்தை சீராக்கி வயிற்று பிரச்சனைகளை போக்குவதில் பெரிய பங்களிக்கின்றது. இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி உடல் எடையை வேகமாக குறைக்க உதவுகிறது.
ஒரு கிளாஸ் தண்ணீரில் இரு டீஸ்பூன் சீரகத்தை இரவில் ஊறவைத்து அதை காலையில் குடிக்கலாம். இது தொப்பை கொழுப்பை (Belly Fat) கரைத்து உடல் எடையை குறைக்க உதவும். சீரக நீரில், ஆண்டிஆக்சிடெண்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன. இதன் மூலம் ஆரோக்கியமற்ற பசி கட்டுப்படுத்தப்படும். இது செரிமானத்தை சீராக்கவும் உதவும்.
காலையில் பருகக்கூடிய இந்த பானங்கள் எடை இழப்புக்கு பல வகைகளில் உதவுகின்றன. இதுமட்டுமின்றி இவற்றில் அதிக அளவில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இருப்பதால் இவற்றால் உடலுக்கு பல வித ஆரோக்கிய நன்மைகளும் ஏற்படுகின்றன.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.