LDL கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் ஆரோக்கியமான வீட்டு வைத்தியங்கள்: கெட்ட கொழுப்புக்கு குட்பை

Cholesterol Control Tips: உடலில் உள்ள எல்டிஎல் எனப்படும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை எப்பொழுதும் கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். சில எளிய இயற்கையான வழிகளின் மூலம் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கலாம். 

Cholesterol Control Tips: கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கொலஸ்ட்ராலை குறைக்கும் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதால், நரம்புகளில் படிந்திருக்கும் அழுக்குகள் நீங்கும். இதனால், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் வெகுவாக குறைகிறது. இரத்த ஓட்டம் சீராகி, இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருந்து, இதய ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.

1 /9

கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்தால் அது பலவித உடல் உபாதைகளை ஏற்படுத்துகின்றது. கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், மாரடைப்பு, இதயக் கோளாறுகள், மன அழுத்த பிரச்சனைகள் ஆகியவை ஏற்படுகின்றன. இவை சில சமயத்தில் தீவிர நிலையையும் எடுக்கக்கூடும்.

2 /9

உடலில் உள்ள எல்டிஎல் எனப்படும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை எப்பொழுதும் கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். சில எளிய இயற்கையான வழிகளின் மூலம் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கலாம். கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில எளிய வீட்டு வைத்தியங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

3 /9

தினமும் ஓட்ஸ் உட்கொள்வதன் மூலமாகவும் எல்டிஎல் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கலாம். ஓட்ஸில் ப்ளூகான் உள்ளது. இது உடலில் படிந்திருக்கும் கெட்ட கொழுப்பை அகற்றுவதில் உதவி புரிகின்றது. கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளவர்கள் தினமும் காலை உணவாக ஓட்ஸ் சாப்பிடலாம். 

4 /9

பூண்டு உணவின் சுவையை அதிகரிப்பதோடு உடலுக்கும் பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கின்றது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றது. தினமும் மூன்று அல்லது நான்கு பூண்டு பற்களை உட்கொள்வதன் மூலம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கலாம்.

5 /9

வெங்காயம் கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து உடலில் உள்ள எல்டிஎல் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கின்றது. தினமும் ஒரு ஸ்பூன் வெங்காயத்தின் சாறை தேனுடன் கலந்து குடித்து வந்தால் ஒரு மாதத்திற்குள் கொலஸ்ட்ரால் அளவு குறைவதை காண்பீர்கள்.

6 /9

கிரீன் டீயில் ஆண்டி-ஆக்சிடெண்ட் பண்புகள் அதிகமாக உள்ளன. இவை கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதோடு, கலோரிகளை எரிக்கவும், தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைத்து, உடல் எடையை வேகமாக குறைக்கவும் உதவுகின்றன.

7 /9

அக்ரூட் பருப்புகளை உட்கொள்வதால் இரத்த நாளங்களில் குவிந்திருக்கும் கொலஸ்ட்ரால் மெதுவாக உருகத் தொடங்குகிறது. இதன் மூலம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு சமநிலைக்கு வரத் தொடங்குகிறது. இது தவிர அக்ரூட் பருப்புகளில் இன்னும் பலவித ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன.

8 /9

இந்த உணவுகளுடன் ஆரோக்கியமான வாழ்க்கை முறை, உணவுமுறை ஆகியவை அவசியம். உடல் செயல்பாடுகள், போதுமான தூக்கம், தண்ணீர், உடற்பயிற்சி ஆகியவையும் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.

9 /9

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.