கண்களை பத்திரமாக பார்த்துக்க டயட்டில் சேர்க்க வேண்டிய ‘சில’ உணவுகள்!

கண் பராமரிப்பு: இந்த டிஜிட்டல் யுகத்தில், மொபைல் மற்றும் டெஸ்க்டாப் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது, ஆனால் இவை நம் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது என்றாலும், அவை நம் ஆரோக்கியத்தையும் பாதிக்கின்றன. இந்த நவீன யுக கேஜெட்டுகள் குறிப்பாக கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானவை. அவற்றின் திரை ஒளி நம் கண்களுக்கு தீங்கு விளைவிக்கும். இதனால் அனைத்து விதமான பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. இது போன்ற தவறான பழக்கவழக்கங்களால், நம் கண்கள் வலுவிழந்து, அதனால் தினமும் கண்களில் எரிச்சல், அரிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுவதுடன், கண்பார்வை பலவீனமடையும் வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில், கண்களை ஆரோக்கியமாக வைத்து, கண் பார்வையை வலுவடையச் செய்யும் பொருட்களை  நாம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

1 /5

ஆம்லா-  ஆம்லா என்னும் நெல்லிக்காய் கண் பார்வைக்கு மிகச் சிறந்த  ஆதாரம். அம்லாவில் வைட்டமின் சி அதிகம் காணப்படுகிறது. இதனால் கண்பார்வை வலுவடைகிறது. நெல்லிக்காயில் செய்யப்பட்ட நெல்லிக்காய் பொடி, சட்னி, ஊறுகாய் மற்றும் நெல்லிக்காய் மிட்டாய் போன்றவை கண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நெல்லிக்காயை தினமும் உட்கொள்ள வேண்டும்.

2 /5

பச்சைக் காய்கறிகள் - கண்பார்வையை மேம்படுத்த பச்சைக் காய்கறிகளை அதிகமாகச் சாப்பிட வேண்டும். பச்சை காய்கறிகள் கண்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இவற்றில் வைட்டமின் ஏ (கரோட்டின்), வைட்டமின் "சி" மற்றும் வைட்டமின் "பி" ஆகியவை காணப்படுகின்றன. பச்சைக் காய்கறிகளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், இரும்பு மற்றும் லுடீன் போன்ற கூறுகள் கண்பார்வையை அதிகரிக்கும்.

3 /5

கேரட்- கேரட்டில் பீட்டா கரோட்டின் உள்ளது, இது கண்பார்வையை அதிகரிக்கிறது. கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ கண்களுக்கு மிகவும் நன்மை பயக்கும்.

4 /5

கடல் உணவு- பல கடல் உணவுகள் கண்களை ஆரோக்கியமாக்குகின்றன. டுனா, சால்மன் மற்றும் ட்ரவுட் போன்ற கடல் உணவுகள் விழித்திரையை பலப்படுத்துகின்றன. இந்த மீன்களில் DHA எனப்படும் கொழுப்பு அமிலம் உள்ளது, இது விழித்திரையின் வலிமையை அதிகரிக்கிறது மற்றும் பார்வையை மேம்படுத்துகிறது.

5 /5

உலர் பழங்கள்- பாதாம், வாதுமை கொட்டை போன்ற உலர் பழங்கள் கண் பார்வையை மேம்படுத்தும். உலர் பழங்களை தினமும் உட்கொள்ள வேண்டும். இதனால் கண்கள் ஆரோக்கியமாக இருக்கும்.