ஒரு நாளுக்கான முழுமையான சுறுசுறுப்பை தருவது நாம் காலையில் சாப்பிடக்கூடிய உணவு தான், அவை சத்தான வகையில் அமைந்திருக்க வேண்டும்.
நார்சத்து நிறைந்த ஓட்ஸ் காலை உணவாக சாப்பிடும்போது நீண்ட நேரத்திற்கு வயிறு நிறைவான உணர்வை தருகிறது. ஓட்ஸ் உடன் நட்ஸ், ப்ளூபெர்ரிஸ் மற்றும் ஆளிவிதைகளை சேர்த்து சாப்பிட்டால் உடலில் உள்ள கொழுப்புகள் குறைவதோடு உங்கள் சருமம் அழகாக இருக்கும்.
முட்டையில் உள்ள ப்ரோட்டீன் நிறைவான உணர்வை தரும், வெறும் முட்டை மட்டும் சாப்பிடாமல் காலை உணவாக முட்டையோடு நார்சத்து நிறைந்த காய்கறிகளையும் சேர்த்து ஆம்ப்லேட் போல செய்து சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும்.
பொதுவாக நட்ஸ் வகைகளில் புரோட்டீனும், நல்ல கொழுப்புகளும் உள்ளன, நட்ஸ் உடல் எடையை குறைக்க உதவுவதாக சில ஆய்வுகள் கூறுகிறது. மேலும் இதை நாம் தினமும் சாப்பிடும்போது நமது சருமமும் இளமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
தயிரில் நிறைந்துள்ள ப்ரோட்டீன் சத்து உங்களது வயிறு நிறைவாக இருப்பது போன்ற உணர்வை தருகிறது. இதில் கால்சியம் சத்தும் இருப்பதால் முதுமை தோற்றத்தை தடுக்க பயன்படுவதோடு, உடல் எலும்புகளுக்கும் வலுவை கொடுக்கிறது.