8th Pay Commission: 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதிக்குள் எட்டாவது ஊதியக் குழுவை அமல்படுத்துவதற்கான வரைவை அரசாங்கம் தயாரிக்கும் என்று ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
8th Pay Commission: 8வது ஊதியக்குழுவின் அமலாக்கம் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை மாற்றியமைக்கும். இது பணவீக்கத்தில் அவர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமையும். 8வது ஊதியக்குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 3.68 மடங்காக மாற்றப்படும் என கூறப்படுகின்றது. அதன் பின்னர் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம் கிட்டத்தட்ட 26,000 ரூபாயாக மாற வாய்ப்புள்ளது. இது சுமார் 44 சதவிகித ஊதிய ஊயர்வுக்கு (44 Percent Salary Hike) வழி வகுக்கும்.
மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் 8வது ஊதுயக் குழு குறித்த அறிவிப்புக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இது குறித்த பேச்சுகளும் தீவிரமடைந்துள்ளன. எனினும், இது குறித்த தெளிவான எந்த தகவலையும் இன்னும் அரசாங்கம் அளிக்கவில்லை. இந்த நிலையில், ஊழியர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் சில நல்ல அப்டேட்கள் தற்போது வந்துள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
8வது ஊதியக்குழு விரைவில் வரும் என மத்திய ஊழியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 2026 ஜனவரியில் எட்டாவது ஊதியக் குழுவை மோடி அரசாங்கம் அறிவிக்கும் என்று அகில இந்திய ரயில்வே மேன்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சிவகோபால் மிஸ்ரா கணித்துள்ளார். இது குறிப்பிடத்தக்க தாமதமாக இருக்கும்.
எட்டாவது ஊதியக் குழுவை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர் சங்கம் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வருகிறது. 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதிக்குள் எட்டாவது ஊதியக் குழுவை அமல்படுத்துவதற்கான வரைவை அரசாங்கம் தயாரிக்கும் என்று ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
இது தொடர்பாக அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. அரசாங்கம் 2014 இல் 7வது ஊதியக் குழுவை நடைமுறைப்படுத்தியது. பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன. அந்த வகையில், 2024 -இல் 8வது ஊதியக்குழு அறிவிக்கப்பட்டு 2026 -இல் இது அமலுக்கு வர வேண்டும்.
7வது ஊதியக் குழுவின் காலக்கெடு முடிவதற்குள் 8வது ஊதியக் குழுவிற்கான பணிகளை அரசாங்கம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 2026 ஜனவரியில் மத்திய ஊழியர்களுக்கு மிகப்பெரிய சம்பளம் உயர்வு இருக்கும் என்பது உறுதி என பொதுச் செயலாளர் சிவகோபால் மிஸ்ரா தெரிவித்தார். ரயில்வே ஊழியர்கள் மற்றும் பிற அரசு ஊழியர்கள் அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறார்கள்.
8வது ஊதியக்குழுவின் அமலாக்கம் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை மாற்றியமைக்கும். இது பணவீக்கத்தில் அவர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமையும்.
ஓய்வூதியம் மற்றும் சம்பளத்தை தீர்மானிக்க, அதற்கேற்ப ஃபிட்மெண்ட் ஃபாக்டரில் மாற்றம் செய்யப்பட வேண்டும். 7வது ஊதுயக்குழுவின் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 ஆக தீர்மானிக்கப்பட்டது. அதன் பின்னர் அடிப்படை ஊதியம் 18,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது.
8வது ஊதியக்குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 3.68 மடங்காக மாற்றப்படும் என கூறப்படுகின்றது. அதன் பின்னர் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம் கிட்டத்தட்ட 26,000 ரூபாயாக மாற வாய்ப்புள்ளது. இது சுமார் 44 சதவிகித ஊதிய ஊயர்வுக்கு (44 Percent Salary Hike) வழி வகுக்கும்.
8வது ஊதியக் குழு அமைக்கப்பட்ட பின்னர் ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும். ஊழியர்களுக்கான சம்பள உயர்வு 20% முதல் 35% வரை இருக்கலாம் என கூறப்படுகின்றது. லெவல் 1 ஊழியர்களின் சம்பளம் சுமார் ரூ.34,560 ஆகவும், லெவல் 18 ஊழியர்களின் சம்பளம் ரூ.4.8 லட்சமாகவும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.
இது தவிர 8வது ஊதியக்குழு அமலுக்கு வந்தால், ஓய்வூதியதாரர்களுக்கும் மிகப்பெரிய நிவாரணம் கிடைக்கும். இதன் காரணமாக அவர்களது மாத ஓய்வூதியத்தில் குறிப்பிடத்தக்க ஏற்றம் ஏற்படும்.
இதற்கிடையில் ஜூலை 2024 -க்கான அகவிலைப்படி உயர்வு அதாவது டிஏ உயர்வு (DA Hike) பற்றிய அறிவிப்புக்காக மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். இந்த முறை 3%-4% டிஏ ஹைக் இருக்கும் என கூறப்படுகின்றது.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.