தபால் நிலையம் வழங்கும் பலவகையான முதலீட்டு திட்டங்களில் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் சிறந்த வருமானத்தையும், பணத்திற்கு பாதுகாப்பையும் தருகிறது.
தபால் அலுவலகத்தின் பிபிஎஃப் திட்டத்தில் குறைந்த தொகையில் முதலீடு செய்வதன் மூலம் அதிகப்படியான தொகையை வருமானமாக பெற்றுக்கொள்ள முடியும்.
பல முதலீட்டாளர்களின் சிறந்த விருப்பமாக தபால் அலுவலகத்தின் இந்த பிபிஎஃப் திட்டம் உள்ளது, ஏனெனில் இதில் அதிகளவு வருமானம் கிடைக்கிறது.
இந்த திட்டத்தில் முதலீடு செய்யக்கூடிய பணம் பாதுகாப்பாகவும், சிறந்த வருமானத்தையும் தரக்கூடியதாக இருக்கிறது. புதியதாக கூட்டு கணக்குகள் திறப்பது இந்த திட்டத்தில் தடை செய்யப்படுகிறது.
மைனர் குழந்தைகளுக்கு இந்த திட்டத்தில் கணக்கு திறக்க வேண்டுமானால் அவர்களது பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் பெயரில் கணக்கை திறந்து கொள்ளலாம்.