Benefits of lemon: எலுமிச்சை செய்யும் அற்புத நன்மைகள்

எலுமிச்சையில் எல்லா சத்துக்களும் உடைய பழங்களில் ஒன்று. மனிதர்களுக்கு ஏற்படும் எல்லாவித நோய்களையும் குணமாக்கும் நிவாரணியாக எலுமிச்சை விளங்குகிறது. எலுமிச்சையின் பல அற்புதமான மருத்துவக் குணங்களை பற்றி இங்கே பார்ப்போம்.

1 /10

மூல நோய் இருப்பவர்கள் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை ஒரு எலுமிச்சைப் பழத்தை இரண்டாக வெட்டி, அதில் கறுப்பு உப்பு கலந்து, வாயில் அடக்கிக்கொள்ளலாம். வலி, வீரியம் குறையும்.

2 /10

வயிற்றில் காற்று அடைத்ததுபோல், அழுத்தமாக இருந்தால் சுடுநீரில் எலுமிச்சை சாறு, வறுத்துப் பொடித்த சீரகம் அரை டீஸ்பூன், சிறிது தேன் கலந்து அருந்தலாம். சட்டென காற்று வெளியேறி, வயிறு லேசாகும்.

3 /10

எலுமிச்சை சாற்றை, மிதமான வெந்நீரில் கலந்து வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம், பல் வலி, ஈறுகளில் ரத்தம் போன்ற பாதிப்புகள் இருந்தால் சரியாகும்.

4 /10

காலையில் வெந்நீரில் 5-10 மி.லி. எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது, உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவும். கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். 

5 /10

எலுமிச்சம் பழத்தின் விதைகளை நீரில் போட்டு காய்ச்சி, அதில் இருந்து எழும் ஆவியை முகத்தில் படும்படி ஆவி பிடித்தால் முகம் பெலிவு பெறும்.

6 /10

எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேன் கலந்து குடித்து வந்தால் வரட்டு இருமல் தீரும். 

7 /10

எலுமிச்சம் பழச்சாற்றை தலையில் தேய்த்து குளித்தால் பித்தம், உடல் உஷ்ணம் போன்றவை குறையும்.

8 /10

எலுமிச்சம் பழத்திற்கு வாந்தி, வாய் குமட்டல், மயக்கம், நீர்வேட்கை, கண் நோய், காது வலி போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை உள்ளது.

9 /10

கடுங்காபியில் எலுமிச்சையின் சாற்றை கலந்து குடித்தால் தலைவலி உடனே குணமாகும்.

10 /10

தேள் கொட்டின இடத்தில் எலுமிச்சை பழத்தை இரண்டு துண்டாக வெட்டி தேய்த்தால் விஷம் முறியும்.