Maha Shivratri Abishekam : கோவில்களில் தினமும் பலமுறை அபிஷேகம் நடத்தப்படுகிறது. அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படும் பொருட்களில் நீர், சந்தனம், பால், தேன், பஞ்சாமிர்தம், தயிர் என பலவகையான பொருட்களால் தெய்வங்களுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.
எந்த அபிஷேகம் என்ன பலன் கொடுக்கும் என்பதைத் தெரிந்துக் கொள்ளுங்கள். கடவுளுக்கு செய்யப்படும் அபிஷேகம் மற்றும் அபிஷேகத்தின் பலன்களையும் தெரிந்துக் கொள்வோம்...
இந்து மதத்தில் தெய்வத்திற்கு அபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பானது. அதிலும், சைவ மதத்தில் அபிஷேகம் என்பது முக்கியமானது. சிவனுக்கு அபிஷேகப் பிரியர் என்பது பெயர். பல்வேறு பொருட்களால் அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. அபிஷேகத்தை பார்ப்பது மிகவும் புண்ணியமானது. அபிஷேகத்தை திருமஞ்சனம் என்றும் சொல்வார்கள்
சிவராத்திரி சமயத்தில் அபிஷேகம் என்பது மிகவும்முக்கியத்துவம் வாய்ந்தது. பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டாலும், அபிஷேகம் என்பது 24 நிமிடங்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்பது ஆகம விதிகள் ஆகும்.
அபிஷேகம் என்றாலே, பால் அபிஷேகம் தான் முதலில் வருவது. சிவன், விநாயகர், முருகன், அம்பாள் என தெய்வங்களுக்கு செய்யப்படும் அபிஷேகங்களில் பால் அபிஷேகம் சிறப்பானது.
கோயில் கருவறையில் சிலையாக வீற்றிருக்கும் மூலவர் திருமேனிக்கு செய்யும் மஞ்சள் திருமஞ்சனம் ஆலயத்தின் சான்னியத்தை அதிகரிக்கும்
மகாலட்சுமிக்கு உரிய சந்தனம் மற்றும் வாசனை பொருட்களால் செய்யப்படும் திருமஞ்சனம் செல்வ செழிப்பைக் கொடுக்கும்
தேனால் செய்யப்படும் அபிஷேகம், பார்ப்பவர்களுக்கு ஆயுளையும் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்
விபூதியால் செய்யப்படும் அபிஷேகம், விரும்பியதைக் கொடுக்கும் என்பது நம்பிக்கை
கடமைகளை சரிவரச் செய்யும் தைரியத்தையும் ஆற்றலையும் தயிர் அபிஷேகம் செய்வது நல்லது