சனி வக்கிரம் 2022 ராசிபலன்: ஜூன் 5-ம் தேதி சனி பகவான் பிற்போக்காக நகரத் தொடங்குவார். அவர் அக்டோபர் 23 வரை வக்கிரமாக, அதாவது பிற்போக்கு இயக்கத்தில் இருப்பார். இதன் விளைவாக, 141 நாட்களுக்கு அனைத்து ராசிகளிலும் இதன் தாக்கம் இருக்கும். குறிப்பாக 4 ராசிக்காரர்களுக்கு சனியின் பிற்போக்கு சஞ்சாரம் நல்லதாக இல்லை. இந்த நேரத்தில், இந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
சனி வக்கிரம் மேஷ ராசிக்காரர்களுக்கு தொந்தரவுகளை கொடுக்கலாம். இந்த நேரத்தில் நிதி இழப்பு ஏற்படலாம். முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது, இல்லையெனில் சிக்கலில் மாட்டிக்கொள்ளக்கூடும். பிற்போக்கு நகர்வில் உள்ள சனி திருமண வாழ்க்கையையும் பாதிக்கும். வீட்டில் சண்டை சச்சரவுகள் வரலாம். டென்ஷன், தவறான புரிதல்கள் அதிகரிக்கும்.
இந்த நேரம் கடக ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகளை உண்டு பண்ணலாம். உங்களுக்கு விபத்துகள் ஏற்படலாம், காயங்கள் ஏற்படலாம். ஆகையால் மிகுந்த எச்சரிக்கைடுடன் இருப்பது நல்லது. நிதி நிலைமையில் மோசமான விளைவு ஏற்படலாம், வருமானம் குறையக்கூடும். கூடி வரும் பணிகளும் இந்த நேரத்தில் கெட்டுப்போக வாய்ப்புண்டு. ஆகையால், இந்த நேரத்தில் பெரிய முடிவுகளை எடுக்க வேண்டாம். முடிந்தால், அத்தகைய முடிவுகளை சிறிது காலத்திற்கு ஒத்திவைக்கவும். இந்த காலத்தில் செலவுகளைக் கட்டுப்படுத்துவதும் மிக முக்கியமாகும்.
மகர ராசிக்காரர்கள் ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தை எதிர்கொண்டுள்ளனர். அப்படிப்பட்ட நிலையில் சனியின் வக்கிர நிலை அவர்களுக்கு நல்லதல்ல. இந்த நேரம் அவர்களின் தொழிலில் மோசமான விளைவை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் தடைகளையும், பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். கோபமாகப் பேசுவது தீங்கு விளைவிக்கும். பண இழப்பும் ஏற்படலாம். மொத்தத்தில், இந்த நேரத்தை பொறுமையுடனும் நிதானத்துடனும் எடுத்துக் கொள்ள வேண்டியது மிக அவசியமாகும்.
வக்கிர சனி கும்ப ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களைத் தரும். இந்த நேரம் இந்த நபர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் தொந்தரவுகளை கொடுக்கலாம். குடும்ப உறவுகளிலும், காதல் உறவுகளிலும் சிக்கல் ஏற்படலாம். திருமண வாழ்க்கையில் தவறான புரிதல்கள் ஏற்படலாம். முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். இந்த காலத்தில் உங்கள் அன்புக்குரியவர்களை நன்றாக நடத்துவது நல்லது. (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )